என் கணவரைக் காணவில்லை - ஜீவஜோதி கதறல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஓட்டல் சரவணபவன் அதிபர் ராஜகோபாலால் மிரட்டப்பட்ட ஜீவஜோதியின் கணவரைக் காணவில்லை

சென்னையில் பிரபல ஓட்டலான சரவணபவன் அதிபர் ராஜகோபால் தன்னிடம் மேனேஜராக வேலை பார்த்தராமசாமி என்பவரது மகளான ஜீவஜோதி என்ற பெண்ணை கட்டாயப்படுத்தி தன்னை மூன்றாவது திருமணம்செய்துகொள்ள வற்புறுத்தினார். ஜீவஜோதி ஏற்கனவே திருமணமானவர்.

தற்போது ஜீவஜோதி தனது கணவரைக் காணவில்லை என்று புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜீவஜோதி நிருபர்களிடம்கூறியதாவது:

நானும் எனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரும் சென்னை வேளச்சேரியில் வசித்துவந்தோம். அப்போது நாங்கள்நடத்திய டிராவல்ஸ் நிறுவனத்திற்கு ஓட்டல் சரவணபவன் அதிபர் ராஜகோபால் பண உதவிகள் செய்தார்.

இதனால் அவர் உண்மையிலேயே நல்ல எண்ணத்துடன் தான் எங்களுடன் பழகுவதாக எண்ணி அவரைநம்பினோம். பிறகு அடிக்கடி என்னைத் தொலைபேசியில் அழைத்து உனது கணவரை விட்டுவிட்டு என்னிடம்வந்துவிடு என்று கூறுவார். ஆனால் அதை நான் ஏற்கவில்லை.

பிறகு அவரது ஓட்டலில் வேலை செய்பவர்களான சேது, பாலா, உசேன், டேனியல், கார்மேகம் போன்றவர்களைஅனுப்பி எங்களை மிரட்டினார்.

பிறகு சென்னை அசோக் நகரில் உள்ள சந்திரசேகர் என்பவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து எனதுகணவரை ராஜகோபால் அடித்து உதைத்தார். மேலும் ஊரைவிட்டு ஓடிவிடும்படி மிரட்டினார்.

மறுநாள் டேனியல் மட்டும் எங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்டதோடு, எங்களுக்கு உதவுவது போல நடித்தார்.பிறகு அவரே எங்களைக் காட்டிக்கொடுத்துவிட்டார். டேனியல் கொடுத்த தகவலின் பேரில் ராஜகோபாலின்அடியாட்கள் எனது கணவரை தனியாக அழைத்துச் சென்றனர்.

பிறகு என்னை கடத்திச் சென்று செங்கல்பட்டுக்குக் கொண்டுசென்று அங்கு ராஜகோபாலின் பென்ஸ் காரில்ஏற்றினார்கள். அந்தக் காருக்குள் ஏற்கனவே ஏற்றப்பட்டிருந்த எனது அம்மா அழுதுகொண்டு உட்கார்ந்திருந்தார்.

அப்போது ராஜகோபால் என்னிடம், என் மீதே புகார் கொடுத்து அசிங்கப்படுத்திவிட்டாயே. நான் என்ன உன்கணவரை கொல்லவா சொன்னேன்? நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்.

பிறகு புகாரை வாபஸ் வாங்க கிண்டி துணைக்கமிஷனர் ஆபிசுக்குச் சென்றோம். ஆனால் கேஸ் கோர்ட்டுக்குப்போய்விட்டது என்று சொல்லிவிட்டார்கள்.

பிறகு ராஜகோபாலும் அவருடைய ஆட்களும் என்னை திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்று எதோ மந்திரம்எல்லாம் போட்டார்கள். பிறகு சென்னைக்கு அழைத்து வந்து வேறு ஒரு வீடு பார்த்து கட்டாயப்படுத்தித் தங்கவைத்தார்கள்.

மேலும் என்னை விட்டுக் கொடுப்பதற்காக எனது கணவருக்கு ரூ.25லட்சம் தருவதாக ராஜகோபால் கூறினார்.இப்போது என் கணவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. உயிருடன் இருக்கிறாரா? இல்லையா என்றேதெரியவில்லை.

இவ்வாறு ஜீவஜோதி கதறி அழுதபடி கூறினார்.

முன்னதாக ஜீவஜோதி தனது கணவருடன் தலைமறைவாகியதாகக் கூறப்பட்டது. ஆனால், ஜீவஜோதியை மட்டும்தான் ராஜகோபாலின் ஆட்கள் தனியே கடத்திப் போய் வைத்திருந்தது ஜீவஜோதியின் பேட்டியிலிருந்துதெரியவந்துள்ளது. இவரையும் கணவரையும் தனித்தனியே அழைத்துச் சென்றுள்ளனர். இப்போது ஜீவஜோதியின்கணவரின் நிலை என்ன என்று தெரியவில்லை.

இந்நிலையில் ராஜகோபாபல் மீது ஜீவஜோதி கொடுத்த வழக்கு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதிஅசோக்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை ஜீவஜோதி வாபஸ் பெறத்தயாராக இருப்பதாக ராஜகோபாலின் வக்கீல் வானமாமலை கூறினார்.

மேலும் ஜீவஜோதி கொடுத்ததாக ஒரு கடிதத்தையும் நீதிபதியிடம் கொடுத்தார். ஆனால் அந்தக் கடிதத்தைஜீவஜோதிதான் எழுதினாரா என்பதில் சந்தேகம் ஏற்படுவதாக நீதிபதி கூறினார். மேலும் வரும் 26ம் தேதிஜீவஜோதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+