பஸ் ஊழியர்கள் போராட்டம் சட்டவிரோதம்: நீதிமன்றத்தில் அரசு மனு
சென்னை:
போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதைச் சட்டவிரோதமான செயலாக அறிவிக்கவேண்டும் என்று கோரி தமிழக அரசின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ் கேட்டுக் கடந்த 13 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தை சட்டவிரோதமான செயலாக அறிவிக்கவேண்டும் என்று கோரி தமிழக அரசு சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் என்.ஆர்.சந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த 13 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்தப்போராட்டத்தை சட்டவிரோதமான செயலாக அறிவிக்க வேண்டும்.
கேரள மாநிலத்தில் இதுபோல போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, கேரள உயர்நீதிமன்றம் அதைச் சட்டவிரோதமான செயல் என்று அறிவித்தது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும்உறுதிப்படுத்தியது.
எனவே தமிழகத்த்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தைச் சட்டவிரோதமான செயலாகஅறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதிசிவசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நளைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications