வங்கக் கடலில் புயல் சின்னம்
சென்னை:
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறிக்கொண்டிருப்பதையடுத்து, தமிழகம் முழுவதிலும் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என்றுவானிலை ஆராய்ச்சி கூறியுள்ளது.
சென்னையில் புதன்கிழமை மாலை முதல் விடியவிடிய பெய்த பேய் மழையால் சென்னை நகரமே ஸ்தம்பித்துப்போனது.
சென்னை நகரில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. சில நாட்களாக மழைஅவ்வளவாக இல்லாத நிலையில் புதன்கிழமை காலை முதல் லேசான மழை பெய்து வந்தது.
ஆனால் மாலை 4 மணிக்கு மேல் கருமேகம் திரண்டு மாலையை இரவாக்கியது. மாலை 5 மணிக்கு மேல் கன மழைபெய்யத் தொடங்கியது. போகப் போக வலுத்ததே தவிர மழை நிற்பதாகத் தெரியவில்லை. இரவு 8.30 மணி வரைகன மழை பெய்தது.
அதன் பின்னர் மீண்டும் இரவு 10 மணிக்கு மேல் மழை பெய்யத் தொடங்கியது. இரவு முழுவதும் மழை பெய்துகொண்டிருந்தது. காலையில்தான் மழை முற்றிலுமாக நின்றது. தொடர்ந்து மேகமூட்டமாக உள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
இந்தக் கன மழை காரணமாக செங்குன்றம், செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications