நாளை பொது வேலை நிறுத்தம்: வன்முறையில் ஈடுபட்டால் பாதுகாப்பு சட்டம் பாயும்
சென்னை:
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளவிருக்கும் பொது வேலைநிறுத்தத்தின்போது வன்முறையில் ஈடுபடுபவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தொடர்ந்து 13 நாட்களாக 20 சதவீத போனஸ் கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துக் கழகஊழியர்கள் நாளை பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கு மத்திய-மாநில அரசு ஊழியர்களும், சில அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் பொது வேலை நிறுத்தத்தின்போது வன்முறையில் ஈடுபடுபவர்களும், பொதுச் சொத்துக்குச் சேதம்விளைவிப்பவர்களும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசுஎச்சரித்துள்ளது.
இத்தகைய செயல்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்தமிழக அரசு கூறியுள்ளது.
மேலும், பொது வேலை நிறுத்தத்தின்போது இயங்கும் அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் மற்றும் வாகனங்களுக்குரோந்து பாதுகாப்பு உள்பட தக்க பாதுகாப்பை வழங்க தமிழகக் காவல் துறைக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications