வீரப்பன் வேட்டையில் தீவிரமாகும் தேவாரம்
சென்னை:
முன்னாள் டிஜிபி தேவாரம் தலைமையிலான சிறப்பு அதிரடிப்படை குழுவினர் வீரப்பனைத் தேடி தர்மபுரி மாவட்டம் ஒகனேக்கல் மலைப்பகுதியில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் பணி சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சூடு பிடித்துள்ளது. இம்முறை எப்படியும்வீரப்பனைப் பிடித்தே தீருவோம் என்ற கங்கனத்துடன் தேவாரம் தலைமையிலான அதிரடிப்படை போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சிறுமலைப் பகுதியில் வீரப்பனைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன் பலனாக வீரப்பனின் 3 கூட்டாளிகள் பிடிபட்டுள்ளனர்.அதே நேரத்தில் தர்மபுரி மாவட்டம் ஒகனேக்கல் மலைப் பகுதியில் வீரப்பன் கும்பலின் நடமாட்டம் இருப்பதாக அதிரடிப்படைபோலீஸாருக்கு உளவுப் பிரிவினர் தகவல் தந்தனர். இதையடுத்து தேவாரம் அங்கு காமிட்டுள்ளார்.
தேவாரத்துடன் நூற்றுக்கணக்கான அதிரடிப்படை வீரர்களும் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நெருப்பூர், பாலாறுஆகிய பகுதிகளில் தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கொள்ளேகால் பகுதியிலும் கர்நாடக அதிரடிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மாதேஸ்வரன் மலைக்குவீரப்பன் தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அங்கும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
வீரப்பனுக்கு உணவுப் பொருள்கள் கொண்டு சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வீரப்பனுக்கு உணவு செல்லும் வழிகளைஅடைத்துவிட்டதாக இரு அதிரடிப் படைகளும் கருதுகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications