பந்துக்கு ஆதரவில்லை
சென்னை:
தமிழகத்தில் போக்குவரத்துக் கழங்கள் விடுத்த பந்துக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. அரசுநிறுவனங்கள் இயங்கின. பெரும்பாலான பள்ளிகள் இயங்கின. தனியார் பஸ்கள், மினி பஸ்களும் இயங்கின.
ஆனால், ஆட்டோக்கள் முழு அளவில் இயங்கவில்லை. சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.சி.டி.யூ. போன்ற தொழிற்சங்கங்களைச்சேர்ந்த தொழிலாளர்கள் ஆட்டோக்களை இயங்கவில்லை.
எல்.ஐ.சி., வங்கி, தொலைத் தொடர்புத்துறை ஊழியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், உணவுத்துறை ஊழியர்கள்,ரேஷன் கடை ஊழியர்கள், மெடிக்கல் ரெப்ரசன்டேடிவ்கள் ஆகியோர் ஆங்காங்கே பந்துக்கு ஆதரவாக தர்ணாபோராட்டம் நடத்தினர்.
சென்னை: சென்னையில் சில தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. சில பள்ளிகளுக்கும் விடுமுறைஅறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல மேலும் சில பள்ளிகளில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பஸ்கள் மிகக் குறைவான அளவே ஓடின. ஆனால், பள்ளிகள் அனைத்துமேதிறந்திருந்தன. ஆட்டோக்கள் முழுமையாக செயல்பட்டன.
கடலூர்: கடலூரில் நேற்று இரவு முதலே பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. இன்று காலை 10 மணிக்கு மேல் தான்சிறிய அளவில் பஸ்கள் ஓடின. நேரம் செல்லச் செல்ல போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. ஆனால்,நேற்றிரவில் திடீரென அனைத்து பஸ்களும் நின்றுவிட பஸ் ஸ்டாண்டுகளில் நூற்றுக்கணக்கான மக்கள்அவதிப்பட்டனர்.
நெய்வேலி: நெய்வேலி சுரங்கத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இன்று பணிக்குச்செல்லவில்லை. இதனால், சுரங்கப் பணிகள் பாதிக்கப்பட்டன. ஆனால், மின் உற்பத்தி ஏதும்பாதிப்புக்குள்ளாகவில்லை.
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் தான் பந்த் ஓரளவுக்கு ஆதரவுடன் நடந்தது. இங்குள்ள தொழிலாளர்களில்பெரும்பான்மையானவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் என்பதால் பணிக்குச் செல்லவில்லை.
திருப்பூர் ஜவுளி ஆலைகளிலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.
எல்.ஐ.சி. ஊழியர்கள் போராட்டம்:
பந்த் நடத்தும் ஊழியர்களுக்கு ஆதரவாக எல்.ஐ.சி. மற்றும் ஜி.ஐ.சி. ஊழியர்கள் இன்று சென்னையில்ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்ணா சாலை எல்.ஐ.சி. கட்டத்தின் வாசலில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மொத்தத்தில் பந்த் மிக அமைதியாக நடந்து கொண்டுள்ளது. கடைகள் திறந்திருப்பதால் பந்த் நடப்பதாகவே உணரமுடியவில்லை.
பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 2 வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டதால் அதுவும் மக்களுக்குப்பழக்கப்பட்டுவிட்டது. இன்றும் மேலும் சில பஸ்கள் குறைந்து இயங்கினாலும் கூட பாதிப்பு அதிகமாகத்தெரியவில்லை.
ஆனால், பந்த்தினால் தகராறும் வன்முறையும் நடக்கலாம் என அஞ்சிய சில பெற்றோர் தங்கள் குழந்தைகளைபள்ளிகளுக்கு அனுப்பவில்லை.
கைதானவர்கள் விடுதலை:
இதற்கிடையே போராட்டம் நடத்திய கடந்த இரு வாரங்களில் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பஸ்தொழிலாளர்களை படிப்படியாக விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இவர்கள் சென்னை, கோவை, வேலூர், சேலம் ஆகிய நகரங்களில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். பந்த்முடிந்தவுடன் இவர்கள் இன்று மாலை முதல் விடுவிக்கப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் நயினார்நாகேந்திரன் கூறினார்.












Click it and Unblock the Notifications