தமிழ்நாடு மீட்புப் படையினர் 4 பேர் பெங்களூரில் கைது
பெங்களூர்:
தமிழ் தேசியவாத இயக்கத்தைச் சேர்ந்த 4 பேரை கர்நாடக போலீசார் பெங்களூரில் கைது செய்தனர்.
இந்திரா நகரில் ஒரு வீட்டிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். வீரப்பனுடன் இப்போது காட்டுப் பகுதியில்இருக்கும் தமிழ்நாடு மீட்புப் படைத் தீவிரவாதிகளுக்கும் இவர்களுக்கும் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது.இவர்களும் அதே இயக்கத்தினர் தான் என்று போலீசார் கூறுகின்றனர்.
இந்த வீட்டை தமிழக போலீசாரின் சிறப்புப் படையினர் சில நாட்களாக கண்காணித்து வந்தனர். அவர்கள்சீருடையில் இல்லாமல் வேறு உடைகளில் ஆயுதஙகளுடன் வீட்டைக் கண்காணித்தனர்.
அவர்களுக்கு பெங்களூர் நகர காவல்துறையும் உளவுப் பிரிவினரும் உதவி வந்தனர். இப்போது அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் ஒருவரின் பெயர் கண்ணன் (வயது 40). மற்றவர்களின் பெயர் விவரம்தெரியவில்லை.
பெங்களூரில் மட்டும் இந்த அமைப்பைச் சேர்ந்த 500 பேர் இருப்பதாக கர்நாடக உளவுப் பிரிவு போலீசார்கூறுகின்றனர். அகண்ட தமிழகம் என்ற கொள்கையுடன் இவர்கள் செயல்பட்டு வருவதாக அவர்கள் கருதுகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு தான் வீரப்பனுக்கு ஆதரவான துண்டுப் பிரசுரங்களுடன் ஒரு கன்னியஸ்திரிபோலீசாரிடம் சிக்கினார். இவரிடம் நடத்திய விசாரணையில் தான் இந்த தமிழ்ப் படையினர் குறித்த விவரம்தமிழக போலீசாருக்குக் கிடைத்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இ-மெயிலில் கொலை மிரட்டல் வந்ததில் இருந்து தமிழ் தேசிய இயக்கங்கள்,படைகள் மீது போலீசார் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications