அதிமுக கூட்டணியில் நீடிக்கலாமா? - தமாகா, கம்யூ. தலைவர்கள் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மத்திய அரசு அமல்படுத்த உள்ள "பொடோ" சட்டத்திற்கு ஆதரவளிக்கமுடிவெடுத்திருப்பதால், அதிமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் த.மா.கா. தலைவர்கள் கூட்டணியில்நீடிப்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் பொடோ சட்டத்திற்கு முன்னாள் முதல்வரும்அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் சூழ்நிலைகளுக்கு ஏற்பவாஜ்பாய் அரசுக்கு அதிமுக தனது ஆதரவை அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதைத் தவிர தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் பலர் அதிமுகவுக்கு ஆதரவாக பகிரங்கமாகப் பேசிவருகின்றனர்.

மேலும் கடந்த சில மாதங்களாக பாரதிய ஜனதாவுக்கும், திமுகவுக்கும் இடையில் உள்ள கூட்டணி உறவில் விரிசல்ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் அடையாளமாக, பொடோ சட்டத்தை திமுக எதிர்க்கும் என்று கருணாநிதிஅறிவித்துள்ளார்.

இதையடுத்து அதிமுக பாரதிய ஜனதாவுடன் இணையும் வாய்ப்பு அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில்பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் கூட்டணியில் அங்கம் வகிக்கும், கம்யூனிஸ்ட் மற்றும தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் தங்கள்அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்து வருகின்றன. இந்த இரண்டு கட்சிகளும் பாரதிய ஜனதாக் கட்சியைமதவாதக் கட்சி என்று ஆரம்பம் முதலே எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து விவாதிக்க கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனைச்சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதிமுக, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் இந்த இரண்டுகட்சிகளும் கூட்டணியில் இருந்து வெளியேறிவிடும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.

இதற்கிடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க. மருத்துவர் அணிக் கூட்டத்தில்கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் கிருபாநிதி, பொதுச் செயலாளர் இல.கணேசன் ஆகியோர்,அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து நாங்கள் எதுவும் விவாதிக்கவில்லை. திமுக இன்னும் தேசியஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கிறது. மேலும் தற்போதைக்கு அதிமுகவுடன் கூட்டணி உருவாகும் சூழ்நிலைஇல்லை என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+