அமைச்சர் பதவியிலிருந்து வளர்மதி ஜெபராஜ் டிஸ்மிஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் பரிந்துரையின் பேரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதிஜெபராஜ் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) மாலை ஆளுநர் மாளிகையான ராஜ் பவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறுகூறப்பட்டுள்ளது.

அவருடைய துறையை பால் வளத்துறை அமைச்சர் சி. சண்முகவேலு கூடுதலாகக் கவனித்துக் கொள்வார்.

வளர்மதி ஜெபராஜின் உதவியாளர் சண்முகசுந்தரத்தை, அவருடைய தம்பி மனோகரன் கொலை செய்ததன்காரணமாகத்தான் முதல்வர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

கடந்த 11ம் தேதி மனோகரன் தன் நண்பர்களுடன் சேர்ந்து மதுரையில் சண்முகசுந்தரத்தைக் கத்தியால் குத்தினார்.இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த மனோகரன், 13ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் சரணடைந்தார்.

இச்சம்பவம் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன் மகளிர் அணித் தலைவர் பதவியிலிருந்து வளர்மதி ஜெபராஜ்நீக்கப்பட்டார்.

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் கத்திக் குத்துப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தசண்முகசுந்தரம் இறந்து போனார்.

இதையடுத்து, வளர்மதி ஜெபராஜ் அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுக ஆட்சிக்கு வந்த இந்த ஆறு மாத காலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆறாவது அமைச்சர் வளர்மதிஜெபராஜ் என்பதும், முதல்வராக பன்னீர்செல்வம் வந்த பிறகு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள முதலாவதுஅமைச்சர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+