ஜாமீன் கோரி "சரவண பவன்" ராஜகோபால் நீதிமன்றத்தில் மனு
சென்னை:
ஜீவஜோதி என்ற பெண்ணை மிரட்டி 3வது திருமணம் செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில்சரணடைந்த "ஹோட்டல் சரவண பவன்" அதிபர் ராஜகோபால், ஜாமீன் கேட்டு இன்று (திங்கள்கிழமை) மனு தாக்கல்செய்துள்ளார்.
அவர் சரணடைவதற்கு முன்பே முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதானவிசாரணை இன்று வருவதாக இருந்தது.
குற்றம் சாட்டியுள்ள ஜீவஜோதியும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இதையடுத்து, ஜீவஜோதியும் இன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
ஆனால், ராஜகோபால் தன்னுடைய முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டதையடுத்து, ஜீவஜோதி சிறிதுநேரம் மட்டுமே நீதிமன்றத்தில் இருந்துவிட்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில், ராஜகோபால் தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி இன்று நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications