பஸ் கட்டணம் உயராது என்கிறார் அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன்இன்று (திங்கள்கிழமை) கூறினார்.

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவதற்காக பஸ்கட்டணம் உயர்த்தப்படுமா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்குத்தான் அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் நிருபர்களிடம் கூறியதாவது:

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மீது அரசு எடுத்திருப்பது பழி வாங்கும் நடவடிக்கை அல்ல. ஒழுங்குநடவடிக்கைதான்.

முன்னறிவிப்பு இல்லாமல் அவர்கள் வேலை நிறுத்தம் செய்ததால்தான், அவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கைஎடுக்கப்பட்டது. அவர்கள் அதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஏற்கனவே அறிவித்திருந்தபடி 8.33 சதவீத போனஸ்தான் அவர்களுக்குக் கிடைக்கும். அதற்கு மேல் பின்னர்வழங்கப்படும் என்று அரசு ஒருபோதும் உறுதி மொழி அளிக்கவில்லை.

வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதிலும் உள்ள போக்குவரத்துக் கழகஊழியர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அனைவரும் வெளியே வருவதற்கு இன்னும் இரண்டு நாட்களாகும். நேற்று இரவு சென்னை மற்றும் மதுரைசிறைகளில் அடைக்கப்பட்டிருந்த போக்குவரத்துக் கழக ஊழியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இன்று திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் சிறைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று காலையிலேயே போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைக்குத் திரும்பத் தொடங்கியிருப்பதால் பஸ்போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

வேலை நிறுத்தத்தின் போது அரசு பஸ்களில் நிர்ணயம் செய்யப்பட்ட ரூ.3 மற்றும் ரூ.5 கட்டணங்களே இன்னும்ஓரிரு நாட்களுக்கு அமலில் இருக்கும். அனைத்து ஊழியர்களும் வேலைக்குத் திரும்பியவுடன் பழைய கட்டணமுறை அமலுக்கு வரும் என்றார் நயினார் நாகேந்திரன்.

சென்னை சாலைகளில் அரசு பஸ்கள்

சென்னை சாலைகளில் அரசு பஸ்கள் அனைத்தும் வழக்கமான டிரைவர், கண்டக்டர்களுடன் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

டிரைவர்களையும், கண்டக்டர்களையும் பயணிகள் ஒருமாதிரியாக பார்த்துக் கொண்டே பயணம் செய்தனர்.அவர்களும் பதிலுக்கு பயணிகளைப் பார்த்து புன்னகை பூத்தவாறு தங்கள் பணிகளைச் செய்தனர்.

சில இடங்களில் தனியார் பஸ்கள் இன்னும் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்து தடுத்துநிறுத்திய டிக்கெட் பரிசோதகர்கள், "அப்பா, உங்க வேலை முடிந்து விட்டது. இனிமேல் இப்படியெல்லாம் வரக்கூடாது. வந்தால் பிடித்து வைத்துக் கொள்வோம்" என்று செல்லமாக மிரட்டி அனுப்பிக் கொண்டிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+