எம்.எல்.ஏ., எம்.பிக்கள் அமளி செய்தால் சஸ்பெண்ட்
டெல்லி:
சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமளி ஏற்படுத்தி, அவைக் கூட்டத்தைத் தடுத்து நிறுத்தினால்அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று சபாநாயகர்கள் மாநாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவைத் தலைவர் பாலயோகிஉள்பட பல தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடைமுறைகள் குறித்து பல விவாதங்கள்இந்த மாநாட்டின்போது நடத்தப்பட்டன. சமீப காலத்தில் அவைகளில் ஏற்படும் அமளிகள் குறித்தும், இதனால்அவைக் கூட்டங்கள் பாதியிலேயே தடைபட்டுப் போவது குறித்தும் இம்மாநாட்டின்போது கவலைதெரிவிக்கப்பட்டது.
எனவே இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்கான சில தீர்மானங்களும் இம்மாநாட்டில் கொண்டுவரப்பட்டன.அவற்றில் சில:
பொது வாழ்க்கையில் நன்னடத்தை கொண்டவர்களையே அரசியல் கட்சிகள் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் உடனடியாகத் தங்களுடைய சொத்து விவரங்களை வெளிடவேண்டும்.
கேள்வி நேரத்தைத் தடை செய்யும் வகையில் உறுப்பினர்கள் நடந்து கொள்ளக்கூடாது. அவர்கள் அவையின்மையப் பகுதிக்கும் வரக்கூடாது.
ஜனாதிபதி மற்றும் ஆளுநர் உரைகளின்போது இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
ரகசிய ஆவணத்தில் உள்ள குறிப்புகளைப் பற்றிப் பேசும்போது, சபாநாயகரின் முன் அனுமதியைப் பெற்றபிறகுதான் பேச வேண்டும்.
சபாநாயகர் ஒருமுறை உத்தரவிட்டால், அந்த உத்தரவைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பக் கூடாது.
இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், நாடாளுமன்றத்தின் அலுவல் நேரம் ஆண்டுக்கு 110 நாட்களாகவும், பெரிய சட்டசபைகளின் அலுவல்நேரம் ஆண்டுக்கு 90 நாட்களாகவும், சிறிய சட்டசபைகளின் அலுவல் நேரம் ஆண்டுக்கு 50 நாட்களாகவும்இருக்க வேண்டும் என்றும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications