பிப்ரவரிக்குள் ஆண்டிப்பட்டியில் இடைத் தேர்தல்?
சென்னை:
தமிழகம் முழுவதிலும் டிசம்பர் 4-ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி முடிவடையும் என்று மாநிலதலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி கூறியுள்ளார்.
சென்னையில் திங்கள்கிழமை அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை பொதுமக்களிடமிருந்துஎந்தவிதமான புகாரும் வரவில்லை.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று நானேவாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை பார்வையிட்டேன்.
அங்கெல்லாம் பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். இதுவரை 45 சதவீத பணிகள் முடிந்துள்ளனஎன்றார் அவர்.
இதற்கிடையே, சைதாப்பேட்டை சட்டசபைத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டும். சட்டசபைத் தொகுதி காலியிடமாக இருந்தால் 6 மாதத்திற்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பது விதி.
எனவே வரும் பிப்ரவரி மாதத்திற்குள் இங்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.
சைதாப்பேட்டைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் காலியாக உள்ள மற்றொரு தொகுதியானஆண்டிப்பட்டிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.
அதிமுக எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச் செல்வன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் அந்த இடம் காலியாக உள்ளது.












Click it and Unblock the Notifications