ராஜ்குமாரைக் கடத்தச் சொன்னது கோபால் தான்: கர்நாடகம் குற்றச்சாட்டு
மைசூர்:
ராஜ்குமார் கடத்தச் சொல்லி வீரப்பனுக்குத் திட்டம்போட்டுக் கொடுத்ததே நக்கீரன் கோபால் தான் என்று கர்நாடகஅதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
அதிரடிப் படையின் டி.எஸ்.பி. தோமைய்யா, சாம்ராஜ்நகர் எஸ்.பி. ஹரிசேகரன் ஆகியோர் மைசூரில்நிருபர்களிடம் கூறியதாக கன்னட நாளிதழ்களில் வந்துள்ள விவரம்:
வீரப்பனுடன் காட்டில் இருக்கும் தமிழ் தேசிய விடுதலைப் படை மற்றும் தமிழ்நாடு மீட்புப் படை ஆகியஅமைப்புகளைச் சேர்ந்த செழியன், ஆதில், செல்வன், இனியன் ஆகியோரை கர்நாடக அதிரடிப்படையினர்சமீபத்தில் விசாரித்தனர். இவர்களை தமிழக க்யூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து கர்நாடகத்திடம் ஒப்படைத்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
அவர்கள் அளித்த விவரம்:
ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி வைத்திருந்தபோது ராஜ்குமாரின் உதவியாளர் நாகப்பா என்பவர் வீரப்பனைஅரிவாளால் வெட்டினார். அந்த நேரத்தில் வீரப்பனும் முகிலன் என்ற 6 வயகு சிறுவனும் தான் நாகப்பாவின்அருகில் இருந்தனர். மற்றவர்கள் அங்கு இல்லை. சிறிது தொலைவில் தூதுவராகச் சென்ற கோபால் இருந்துள்ளார்.
நாகப்பா வெட்டியதில் வீரப்பனின் விரல்கள் துண்டாகி காயம் ஏற்பட்டுள்ளது. நிலைகுலைந்த வீரப்பனை கழுத்தைவெட்டவும் நாகப்பா முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் கோபால் தான் ஓடிவந்து நாகப்பாவைத் தடுத்துள்ளார்.இதையடுத்துத் தான் நாகப்பா அங்கிருந்து தப்பி ஓடி வந்தார். வீரப்பனைக் கொல்வதை கோபால் தடுத்துவிட்டார்.
அதே போல பின்னர் சென்ற தூதுக் குழுவில் டாக்டர் பானு இடம் பெற்றதே வெட்டப்பட்ட வீரப்பனின்விரல்களுக்கு சிகிச்சை அளிக்கத் தான். ராஜ்குமாருக்காக அவரை அழைத்து வரவில்லை.
ராஜ்குமாரைக் கடத்தச் சொல்லி வீரப்பனுக்கு திட்டம் போட்டுக் கொடுத்ததே நக்கீரன் ஆசிரியர் கோபால் தான்.அவரைக் கடத்தச் சொல்லி நாங்கள் கூறவேயில்லை.
அதே போல காட்டுக்குள் தனித் தமிழ்நாடு கொடியை ஏற்றி பரபரப்பை ஏற்படுத்துச் சொல்லிக் கொடுத்ததும்கோபால் தான்.
இவ்வாறு அந்த நால்வரும் வாக்குமூலம் அளித்துள்ளனர் என போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
வீரப்பனைக் கொல்வதை கோபால் ஏன் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இவ்வாறு கன்னட நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications