பான் மசாலாவுக்குத் தடை: வெற்றிலை விற்பனை கடும் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

தமிழகத்தில் சமீபத்தில் பான் மசாலா விற்பனைக்குத் தடை செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வெற்றிலைவிற்பனையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பான் மசாலாவுடன் வெற்றிலை, புகையிலை போன்றவற்றையும் சேர்த்துத்தான்பயன்படுத்துகின்றனர். பல இளைஞர்கள் எப்போது பார்த்தாலும் வெற்றிலையை வாயில் மென்று, குதப்பிக்கொண்டே இருப்பது வழக்கம்.

இதனால், பான் மசாலா இல்லாமல் வெற்றிலையும் இல்லை என்ற நிலைதான் தற்போது நிலவுகிறது. இதனால்வெற்றிலை வியாபாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கும்பகோணமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும்தான் வெற்றிலைக்குப் புகழ் பெற்றவை.ஆண்டுதோறும் இங்கு வெற்றிலை பயிரிடப்பட்டு, மகசூலும் அமோகமாக நடக்கும்.

ஆனால் தற்போது பான் மசாலா, புகையிலை, குட்காவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெற்றிலையும்விற்பனையாகவில்லை. 90 சதவீத அளவு வெற்றிலை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமானவெற்றிலைகளும் அழுகி, நாசமாகியுள்ளன.

எனவே வெற்றிலை விற்பனை மீண்டும் சீரடைவது குறித்து தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுவெற்றிலை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் வெற்றிலை வியாபாரிகளும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+