பின் லேடனுக்கு ஆதரவு: 5 பள்ளி மாணவர்கள் சஸ்பெண்ட்
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே பின் லேடனுக்கு ஆதரவாக பள்ளி வகுப்பறையில் உள்ளகரும்பலகையில் எழுதிய 5 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
முத்துப்பேட்டை அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் அரசு ஆண்கள் பள்ளியில்பாலசுப்பிரமணியன் என்ற மாணவன் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.
இவன் சொத்தூரப் பொட்டு வைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்ததை, அதே பள்ளியில் படிக்கும் ரியாஸ் கான், சேஷ்முகைதீன் ஆகிய மாணவர்கள் கண்டித்து, அவனைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
மறுநாளே பள்ளியில் உள்ள ஒரு கரும்பலகையில் "பின் லேடன் வாழ்க" என்றும் "மாவு (இந்து) ஒழிக" என்றும்எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களுக்கும் மற்றும் சில கிராமத் தலைவர்களுக்கும் தலைமைஆசிரியர் காசிநாதன் தெரிவித்தார்.
உடனே இவர்கள் அனைவரும் ஒன்று கூடி, சந்தேகப்பட்ட சில மாணவர்களை அழைத்து விசாரித்தனர்.
விசாரணையின்போது, ரியாஸ் கான், ஷேன் மொய்தீன், நாகூர் பிச்சை, பைரோஸ் கான், ஹூமாயுதீன் ஆகிய ஐந்துமாணவர்களும்தான் இவ்வாறு பின் லேடனுக்கு ஆதரவாக கரும்பலகையில் எழுதியிருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அந்த ஐந்து மாணவர்களும் பள்ளியிலிருந்து 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications