அமெரிக்கா மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை வான் பகுதியில் எங்கள் ஹெலிகாப்டர் அத்து மீறிப் பறக்கவில்லை என்று சென்னை வந்துள்ளஅமெரிக்கக் கப்பலின் கேப்டன் ஜாப்ரி பேக் தெரிவித்துள்ளார்.

சென்னை நகரின் மீதும், கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் மீதும் அடையாளம் தெரியாத ஒரு உளவு பார்க்கும்ஹெலிகாப்டர் 2 மணி நேரம் பறந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த ஹெலிகாப்டர் நேற்று சென்னை வந்த அமெரிக்கப் போர்க் கப்பலானயு.எஸ்.எஸ். ஜான் யங்கிலிருந்து புறப்பட்டுச் சென்றது என்று கூறப்பட்டது.

ஆனால் இதை அந்தக் கப்பலின் கேப்டன் ஜாப்ரி பேக் மறுத்துள்ளார். சென்னை வான் பகுதியில் எங்களுடையஹெலிகாப்டர் அத்து மீறிப் பறக்கவில்லை என்று பேக் கூறியுள்ளார்.

எங்கள் கப்பல் இருக்கும் இடத்தைச் சுற்றி பாதுகாப்புக்காக வழக்கமாக எங்கள் ஹெலிகாப்டர் சுற்றி வரும் என்றும்அதுபோலவே நேற்றும் ஹெலிகாப்டர் பறந்துள்ளது, ஆனால் முறைப்படி தகவல் தெரிவித்து விட்டுதான் பறந்ததுஎன்றும் பேக் கூறினார்.

அமெரிக்கக் கப்பல் சென்னையில் இருக்கும் வரை தினமும் இதுபோல் ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம்நடைபெறும். ஆனாலும் இதற்காக முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகுதான் எங்கள் ஹெலிகாப்டர்சென்னை வானில் பறக்கும் என்றும் உறுதியளித்தார் பேக்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+