சென்னையில் பட்டப் பகலில் பெண் படுகொலை - நகைகள் கொள்ளை
சென்னை:
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண் பட்டப் பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
சிவகாசியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரன். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பல ஆண்டுகளாகஅதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
பத்து வருடத்திற்கு முன்பு கோடம்பாகத்தில், கங்கையம்மன் கோவில் தெருவில் புதிய வீடு வாங்கி குடியேறினார்.இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு ராஜ்குமார் என்ற மகனும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர். ராஜ்குமார்என்ஜீனியரிங் படித்து வருகிறார், லட்சுமி பிளஸ் டூ படிக்கிறார்.
நேற்று (திங்கள்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் நாகேஸ்வரனின் மகன் ராஜ்குமார் கல்லூரியிலிருந்து வீடுதிரும்பினார். வீட்டின் வெளிக் கதவு திறந்து கிடந்ததைக் கண்டு கேள்விக்குறியுடன் வீட்டுக்குள் போனார். அங்குஅவரது அம்மாவைக் காணவில்லை.
ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டு வந்தவர் படுக்கை அறைக்குள் பார்த்தபோது அங்கு சந்திராஅலங்கோலமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைப் பார்த்து பதறினார்.
உடனடியாக போலீஸாருக்கும், தனது தந்தைக்கும் போன் செய்தார். இணை கமிஷனர் திரிபாதி, கிண்டி துணைகமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
முதல் கட்ட விசாரணையின்போது சந்திரா அணிந்திருந்த 15 பவுன் தாலிச் சங்கிலி, வீட்டிலிருந்த 20 பவுன் நகைகள்,பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
சந்திரா கொலை செய்யப்பட்ட இடத்தில் இரண்டு கத்திரிக்கோல்கள் கிடந்தன. மேலும் கழுத்து நெரிக்கப்பட்டநிலையில் சந்திரா பிணமாகக் கிடந்தார்.
இதனால் கத்திரிக்கோல்களைப் பயன்படுத்தியும், கை அல்லது கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டும் சந்திராகொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் டைனிங் ரூமில் இரண்டு டீ கப்கள் இருந்தன. எனவேகொலையாளிகள் இரண்டு பேராக இருக்கலாம் என்றும் தெரிகிறது.
வீட்டுக்கு வரும் விருந்தினர்கள், நண்பர்கள், உறவினர்களுக்கு மட்டுமே கப்களில் டீ தருவது நாகேஸ்வரன்குடும்பத்தினரின் வழக்கம். எனவே கொலையாளிகள் சந்திராவுக்குத் தெரிந்தவர்களாக இருக்கலாம் என்றும்கருதப்படுகிறது.
இதுகுறித்து கோடம்பாக்கம் போலீஸார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications