காஞ்சிபுரம் அருகே லாரி-டாடா சுமோ நேருக்கு நேர் மோதல்: 8 பேர் பலி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே லாரியும் டாடா சுமோ காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த ஒரு குழந்தை,2 பெண்கள் உள்பட 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கொஞ்சிபுரம் அருகே லாரியும் டாடா சுமோ காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த ஒரு குழந்தை,2 பெண்கள் உள்பட 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி இந்தக் காரின் மீதுநேருக்கு நேராகப் பயங்கரமாக மோதியது.
இதில் டாடா சுமோ கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இதனால் இதில் பயணம் செய்த ஒரு குழந்தை, இரு பெண்கள்உள்பட எட்டு பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த ஒரு சிறுவன் உள்பட இரண்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications