வீரப்பன் சிகிச்சைக்குத்தான் டாக்டர் பானு வந்தார் - நக்சல்கள் ஒப்புதல்
ஈரோடு:
நாகப்பா கூறியதைப் போல ராஜ்குமார் கடத்தப்பட்டிருந்தபோது, அவரை மீட்கச் சென்ற தூதுக்குழுவுடன் சென்றடாக்டர் பானு வீரப்பனுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகத் தான் சென்றார் என்று போலீசாரின் பிடியில் உள்ளநக்சலைட்டுகள் ஒத்துக் கொண்டுள்ளனர்.
கன்னட நடிகர் ராஜ்மார் கடத்தப்பட்டிருந்த போது, அவருடன் கடத்தப்பட்ட நாகப்பா என்பவர் வீரப்பனைத்தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதனால் வீரப்பனுக்கு தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து காட்டுக்குள் சென்ற நெடுமாறன் தலைமையிலான தூதுக்குழு, தங்களுடன் பெண் டாக்டர் பானுஎன்பவரையும் அழைத்துச் சென்றனர்.
அவர் ராஜ்குமாரின் உடம்பைச் சோதித்துப் பார்த்து, அவரது உடல் நிலை மோசமாகி உள்ளது என்று கூறியதால்தான் வீரப்பன் ராஜ்குமாரை விடுவித்தான் என்று கூறப்பட்டது.
ஆனால் டாக்டர் பானு, நான் தாக்கியதால் வீரப்பனுக்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சையளிப்பதற்காகத் தான்காட்டிற்கு அழைத்து வரப்பட்டார் என்று நாகப்பா கூறினார்.
இதை தற்போது போலீசார் பிடியில் உள்ள நக்சலைட்டுகள் ஒத்துக் கொண்டுள்ளதாக கர்நாடக அதிரடிப்படைப்போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications