காலியான கஜானாவும், காலி வயிறுகளும்
சென்னை:
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் தமிழக அரசிடம் தினந்தோறும் தேவைப்படும் நிர்வாகசெலவுகளுக்கே பணம் இல்லை.
கஜானா சுத்தமாக காலியாகிவிட்ட நிலையில் அடுத்த மாதம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தரக் கூட நிதி இல்லை.கடந்த பல மாதங்களாகவே இதே நிலை தான் நிலவி வந்தது.
ஆனால், தீபாவளி வந்ததில் அரசு இன்னும் போண்டியாகிவிட்டது. 8.33 சதவீத போனஸ் தான் தர முடியும் எனக்கூறி அந்த போனஸை அரசு வழங்கியது. இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் கூடுதல் செலவானது.
இந் நிலையில் தான் பஸ் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வந்தது. இதனால் அரசுக்கு நாளொன்றுக்கு பலகோடி நஷ்டம் ஏற்பட்டது. இவர்களின் ஸ்டிரைக்கை சமாளிக்க தனியார் பஸ், வேன்களை வாடகைக்கு எடுத்தது,தாற்காலிக டிரைவர், கண்டக்டர்களுக்கு ஊதியம் அளித்தது என கோடிகள் கரைந்தன.
5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுக தனது ஆட்சி காலத்தின் கடைசி இரு ஆண்டுகளில் புதிய வரிகளைவிதிக்கவில்லை. கடைசி ஆண்டில் கிட்டத்தட்ட வரி உயர்வே இல்லாத பட்ஜெட்டை திமுக சமர்பித்தது. இதனால்அரசின் வருவாய் பாதிக்கப்பட்டது. வருவாய் அதிகரிக்கவேயில்லை.
ஆனால், அதே நேரத்தில் அரசின் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பணவீக்கமும் சேர்ந்துகொண்டதால் அரசின் வருமானத்துக்கும் செலவுக்கும் பெரும் வேறுபாடு ஏற்பட்டு வந்தது. கஜானா காலியானது.
இந் நிலையில் கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்தது அதிமுக அரசு. பதவியேற்ற உடனேயே அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்திவிட்டு சோகமாக வந்த நிதியமைச்சர் பொன்னையன் அரசின் கஜானாவை திமுக காலிசெய்துவிட்டுப் போய்விட்டது என்று குற்றம் சாட்டினார்.
இதனால் 10 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தரக் கூட பணமில்லாமல், ஆளுநரின் உதவியுடன் ரிசர்வ்வங்கியில் முன் பணம் வாங்கி நிலைமையை சமாளித்து வந்தது தமிழக அரசு. ஆனால், இப்போது நிலைமைசுத்தமாக கைமீறிப் போய்விட்டதாகத் தெரிகிறது.
மாநில அரசின் நிதி நிலைமையை சீராக்க கடும் நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற நிலைவந்துவிட்டது. இதையடுத்து கடந்த 19ம் தேதி முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் கூடிய அமைச்சரவையில்இந்த கட்டண உயர்வுகளை உடனடியாக அமலாக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த கட்டண உயர்வுகள் எல்லாமே வரும் டிசம்பர் 1ம் தேதி, சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன.
ஆனால், அரசுக்குச் சேர வேண்டிய கோடிக்கணக்கான பணம் காண்ட்ராக்டர்களுக்கு கமிஷனாகவும்,அரசியல்வாதிகளுக்கு லஞ்சமாகவும், அதிகாரிகளுக்கு மாமூலாகவும் போய் விடுகிறது.
இதைச் சீர்படுத்தி, ஊழலைக் கலைந்தால் தவிர எவ்வளவு வரி போட்டாலும், கட்டணத்தை உயர்த்தினாலும் கஜானாகாலியாகத் தான் இருக்கும்.
அன்றாடம் காய்ச்சிகள், பென்சன் வாங்கி காலத்தை ஓட்டுவோர், குறைந்த ஊதியத்தில் வாழ்க்கையைஓட்டுபவர்களுக்கு இந்த திடீர் அதிரடி கட்டண உயர்வுகள் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
ஒரே நேரத்தில் பஸ், மின்சாரம், பால், அரிசி, சர்க்கரை என்று எல்லா கட்டணத்தையும் அரசு உயர்த்தியிருப்பதும்அரசு மருத்துவமனைகளில் கட்டண விதிப்பும் சமானிய மக்களால் சமாளிக்கவே முடியாது.
அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்-ஊழியர்கள், மோசடிப் பேர்வழிகள், கமிஷன் அடிக்கும்அரசியல்வாதிகள், அடாவடி சுரண்டல் கும்பல் தவிர சாதாரண மாத ஊதியதாரர்கள் இந்த சுமையைதாக்குப்பிடிப்பது மிகவும் சிரமம் தான்.
இந்த நடுத்தர மக்கள் போராடக் கூட தெம்பில்லாதவர்கள். வருகிற சிரமங்களை பல்லைக் கடித்துக் கொண்டுஏற்கும் மனோபாவம் கொண்டவர்கள்.
விலை உயர்வுகளை அடுத்து கஜானாவை காலி செய்து விட்டதாக ஒரு கட்சி அடுத்த கட்சி மீது பழி போடுவதும்,அதற்கு அந்தக் கட்சி பதிலளிப்பதுமாக தமிழகத்தில் அரசியல் சத்தம் சில நாட்கள் மிக அதிகமாகக் கேட்கும்.
இந்தச் சத்தத்தில் காலி வயிறுகளின் மெளன ஓலம் அரசின் காதுகளில் விழப் போவதில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications