ஐ.சி.சி. உத்தரவை மீறி இந்திய அணியில் சேவாக்
ஜெய்ப்பூர்:
இந்தியாவில் அடுத்த வாரம் தொடங்க உள்ள இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வீரேந்திரசேவாக் இடம்பெறுவார் என்று இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவில் நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டின்போது விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதாக,ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியில் சேவாக் விளையாடக் கூடாது என்று நடுவர் மைக் டென்னஸ் தடைவிதித்திருந்தார்.
பஞ்சாப்பில் உள்ள மொஹாலியில் திங்கள்கிழமை தொடங்கவுள்ள இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட்போட்டியில்தான் அவர் இடம் பெறக் கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.) அறிவித்து விட்டது.
இதுகுறித்து, இந்திய கிரிக்கெட் போர்டு வரும் வெள்ளிக்கிழமைக்குள் தங்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்என்றும் ஐ.சி.சி. காலக்கெடு விதித்திருந்தது.
இந்நிலையில் மொஹாலி டெஸ்டில் 14 வீரர்களில் ஒருவராக சேவாக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றுஇந்திய கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.
கடந்த 23ம் தேதி துவங்கிய தென் ஆப்பிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்டில் விளையாடாததன் மூலமாக,தண்டனையை அனுபவித்துவிட்டார் சேவாக். அதனால் அவர் இந்த மொஹாலி டெஸ்ட் போட்டியில்விளையாடுவதில் தவறில்லை என்றும் இந்திய கிரிக்கெட் போர்டு விளக்கமளித்துள்ளது.
ஆனால் சர்ச்சைக்குரிய அந்த மூன்றாவது டெஸ்டை ஐ.சி.சி. அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதனால்தான் மொஹாலி டெஸ்ட்டிற்கு சேவாக்கைத் தேர்வு செய்யக் கூடாது என்று ஐ.சி.சி. அறிவித்தது.
இந்நிலையில் மொஹாலி டெஸ்ட்டுக்கு சேவாக் தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம், இந்தப் போட்டியையும்ஐ.சி.சி. அங்கீகரிக்காமல் போவதற்கு 99.99 சதவீதம் வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் தங்கள் சுற்றுப் பயணத்தையே ரத்து செய்யலாம் என்றும்கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications