மதுரையில் பஸ் பயணிகள் மீது போலீசார் தடியடி
மதுரை:
மதுரையில் பெரியார் பஸ் நிலையத்தின் முன்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பயணிகள் மீது போலீசார்நடத்திய தடியடியில் 20 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு:
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை விடுதலை செய்யக் கோரி மதுரை மற்றும் தென் மாவட்டங்களில்அக்கட்சியினர் சார்பில் முழு அடைப்பு நடத்தப்பட்டது.
ஆனால் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பந்த்துக்கு ஆதரவு இல்லை. இருப்பினும் இரவு நேரங்களில்பஸ்களை இயக்க போக்குவரத்துக் கழக நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
திடீரென்று இவ்வாறு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் வெறுப்பான பொதுமக்கள், பஸ்களை இயக்க வேண்டும் என்றுகேட்டு பெரியார் பஸ் நிலையம் முன்பாக சாலை மறியல் செய்ய ஆரம்பித்தனர்.
போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் சென்றால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாது என்று போலீசாரிடம்பொதுமக்கள் சார்பில் கேட்கப்பட்டது. ஆனால் போக்குவரத்துக் கழக நிர்வாகம் அனுமதியளிக்க மறுப்பதால்,சாலை மறியலைக் கைவிடும்படி போலீசார் பொதுமக்களைக் கேட்டனர்.
இதற்கு பொதுமக்கள் மறுக்கவே அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இதில் 20க்கும்மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
பஸ் ஊழியர்களின் மறைமுகப் போராட்டம்
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க முடியாது என்று தமிழக அரசு மறுத்துவிட்டதால்,வேறு வழியில்லாமல் போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்குத் திரும்பினார்கள்.
ஆனால் பணிக்குத் திரும்பியதிலிருந்து டிரைவர்கள் அனைவரும், வேண்டுமென்றே மெதுவாக ஓட்டுகிறார்கள்.இதனால் நேரத்திற்கு அவர்கள் வண்டியை எடுப்பதில்லை. மேலும் பஸ்ஸில் சிறு பிரச்சனை இருந்தாலும் உடனேஅப்படியே பஸ்ஸை நிறுத்திவிட்டு நின்றுகொள்கிறார்கள் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல தான் கண்டக்டர்களும். அவர்கள் யாரும் இப்போது பயணிகளைத் தேடிச் சென்று டிக்கெட்கொடுப்பதில்லை. ஏனோ தானே என்று நின்ற இடத்திலேயே டிக்கெட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும்அதிகாரிகள் கூறினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications