நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு
டெல்லி:
சென்னை வான் வெளியில் அமெரிக்க ஹெலிகாப்டர் அத்துமீறி பறந்த விவகாரம் இன்று (புதன்கிழமை)நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இந்தியாவின் பாதுகாப்புக்கு வந்த ஆபத்து என்பது போன்ற கோஷங்களை எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.
பிரதமர் வாஜ்பாய் உடனடியாக இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அப்போதுஅவையில் மூத்த அமைச்சர்கள் யாரும் இருக்கவில்லை.
சம்பவம் நடந்து 48 மணி நேரம் ஆகியும் மத்திய அரசு இது குறித்து எந்தவிதமான அறிக்கையையும்வெளியிடவில்லை என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
நமது நாட்டின் முக்கிய பாதுகாப்பு நிலைகள் அமெரிக்காவிடம் அடகு வைக்கப்பட்டனவா என்று கேள்விநேரத்தின்போது கேட்ட காங்கிரஸ் உறுப்பினர் ஜனார்த்தன் ரெட்டி, இச்சம்பவம் நமது பாதுகாப்புக்குவிடப்பட்டுள்ள சவால் என்று கூறினார்.
அமெரிக்கக் கப்பல் நம் நாட்டுக்கு எதற்காக வந்தது என்று கேள்வி எழுப்பிய மற்றொரு காங்கிரஸ் உறுப்பினர்மார்க்கரெட் ஆல்வா, அவர்களுடைய கேளிக்கைக்காக நம் நாட்டுப் பெண்களை உபயோகித்துக் கொள்கிறார்கள்என்று கூறினார்.
இதை மதிமுக உறுப்பினர்கள் கடுமையாக ஆட்சேபித்தனர்.
பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வாசுதேவ் பட்டாச்சார்யா எழுந்து, இந்த விஷயத்தை மத்தியஅரசு உண்மையிலேயே அமெரிக்காவிடம் தெரிவித்து விட்டதா என்று கேள்வி எழுப்பினார். அமெரிக்க கப்பல்உடனடியாக சென்னை துறைமுகத்தை விட்டு வெளியேற உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரியஜனதா கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், இச்சம்பவம் குறித்து அரசு நாளை அறிக்கை அளிக்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர்பி.எம்.சயீத் உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications