முள்ளில் கிடந்த பச்சிளம் குழந்தை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெண் சிசுக்களை நிராகரிக்கும் மக்களின் மத்தியில் பிறந்து 3 மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று முள் புதருக்குள் கிடந்துமீட்கப்பட்டது.
சென்னை புறநகரான போரூர் செல்லும் வழியில் உள்ள பட் ரோடு என்ற பகுதியில் கருவேல மரங்கள் அதிகம் உள்ளன. அந்தப்பகுதியில் வியாழக்கிழமை காலை குழந்தை அழும் சத்தம் கேட்டது.
இதையடுத்து அந்தப் பகுதியில் சென்றவர்கள் பார்த்தபோது அங்கு ஒரு ஆண் குழந்தை கதறிக் கொண்டிருந்தது. இதையடுத்துஅதிமுகவைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் அந்தக் குழந்தையை எடுத்து குளிக்க வைத்து சமூக நலத்துறை அமைச்சர்பா.வளர்மதியிடம் ஒப்படைத்தார்.
அந்தக் குழந்தை தொட்டில் குழந்தைத் திட்டத்தின் கீழ் வளர்க்கப்படும்.












Click it and Unblock the Notifications