தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை:
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 30 சதவீத அரசு ஊழியர்கள் "கட்" செய்யப்படப் போவதைக் கண்டித்தும், விருப்பஓய்வுத் திட்டத்தை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.
தமிழக அரசில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, நேற்று அரசு கட்டண உயர்வு,விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகளையும் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் குறைக்கப்படும்.இதற்காக வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் விருப்ப ஓய்வு திட்டம் (வி.ஆர்.எஸ்.) அமலாக்கப்படும்.
மேலும், ஈட்டிய விடுப்பை (எர்ன்ட் லீவ்) பணமாக்கிக் கொள்வது, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பி.எப்பிலிருந்துபணம் எடுப்பது ஆகியவற்றுக்கும் அரசு தடை விதித்துள்ளது.
இவற்றையெல்லாம் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் மெடிக்கல் சர்வீஸ் இயக்கக அலுவலகத்திற்கு முன் அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை ரத்து செய்வதைக் கண்டித்து அரசு எதிராக அவர்கள் கோஷங்கள்எழுப்பினார்கள்.
இதேபோல் மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி உள்பட பல்வேறு இடங்களிலும் அரசுஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications