டெல்லியில் விடுதலைப் புலிகளா?: தீவிர விசாரணை
டெல்லி:
இந்தியாவில் விடுதலைப் புலிகளின் முக்கிய கமாண்டர் பிடிபட்டுள்ளார்.
ராஜிவ் காந்தி மரணத்தையடுத்து புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்தபுலிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் புலிகள் அமைப்பினரே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் மத்தியப்பிரதேசத்தில் புலிகள் இயக்கதைச் சேர்ந்த பெலகாளி என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது இலங்கையில் பல கொலை வழக்குகள் உள்ளன. 17 இலங்கை ராணுவ வீரர்களைக் கொன்ற வழக்கும்உள்ளது. இந்தியாவில் 1998ம் ஆண்டு பதிவான போதை மருந்து தொடர்பான வழக்கில் இவர் மீது குற்றச்சாட்டுஉள்ளது. டெல்லி போலீஸ் இந்த வழக்கை பதிவு செய்திருந்தது.
கடந்த மாதம் கைதாகி மத்தியப் பிரதேசத்தில் சிறையில் இருந்த இவரை மத்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்றுடெல்லி கொண்டு சென்றனர். போதை-தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள்குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் டெல்லியில் அவருக்கு பலரிடம் தொடர்பிருப்பதாக மத்திய அரசு நினைக்கிறது. அவர்கள் விடுதலைப்புலிகளாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. டெல்லியில் புலிகளுக்கு நெட்வோர்க் ஏதும் உள்ளதாஎன்ற தீவிர விசாரணையில் மத்திய அரசு இப்போது இறங்கியுள்ளது.
டெல்லி மாநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவரை 7 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதிஉத்தரவிட்டார். இதனால், இவர் காவல் நிலையத்திலோ அல்லது மத்திய அரசு புலனாய்வு அமைப்புகளின்அலுவலகத்திலோ வைத்து விசாரிக்கப்படுவார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications