இந்தியாவுக்குள் பறக்கவில்லை: அமெரிக்கா விளக்கம்
டெல்லி:
சென்னை வான் பகுதிகளில் பறந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தை உளவு பார்த்ததாகக் கூறப்படும் அமெரிக்கஹெலிக்காப்டர் சர்வதேச வான் எல்லைக்குள் தான் பறந்தது என்று அமெரிக்க கடற்படைக் கமாண்டர் டென்னிஸ்பிளேர் கூறினார்.
சென்னைத் துறைமுகத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக வந்துள்ள அமெரிக்கப் போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். ஜான்யங்கிலிருந்து கிளம்பிய ஒரு ஹெலிக்காப்டர் சென்னை மற்றும் கல்பாக்கம் வான் பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை2 மணி நேரத்திற்கும் மேலாக வட்டமிட்டது.
இந்த ஹெலிகாப்டர் விமானிகளுடன் சென்னை விமானப்படை அதிகாரிகள் தொடர்பு கொள்ள முயன்றபோதுஅவர்கள் தொடர்பு கொள்ள மறுத்துவிட்டனர்.
இதையடுத்து கல்பாக்கம் அணுமின்நிலையத்தை உளவு பார்ப்பதற்காகத் தான் அமெரிக்க ஹெலிக்காப்டர்வட்டமிட்டது என்பது தெளிவானது.
ஆனால், அமெரிக்கப் போர்க்கப்பலின் கேப்டன், எங்கள் கப்பலில் இருந்த எந்த ஹெலிக்காப்டரும் சென்னைவான் பகுதிகளில் பறக்கவில்லை என்று மறுத்தார்.
இந்நிலையில் அமெரிக்கக் கடற்படையின் ப-சி-பிக் கமாண்ட் பகு-தி தலைமைக் கமாண்டர் டென்னிஸ் பிளேர்அளித்துள்ள விளக்கத்தில்,
எங்கள் போர்க் கப்பல் இந்திய எல்லைக்குள் நுழையும் முன் அதில் இருந்து கிளம்பிய ஹெலிக்காப்டர் சர்வதேசவான் பகுதியில் பறந்தது. இது இந்திய வான் பகுதிகளில் நுழையவே இல்லை. பின்னர் கப்பல் சென்னை துறைமுகம்அருகே சென்றபோது மீண்டும் அந்த ஹெலிகாப்டர் கப்பலில் தரையிறங்கிவிட்டது. முழுக்க முழுக்க அது சர்வதேசவான் எல்லையில் தான் பறந்தது. இது வழக்கமாக பின்-பற்-றப் படும் நடைமுறைதான்.
மேலும் சென்னைத் துறைமுகத்திற்கு வந்துள்ள போர்க்கப்பல் இந்திய நீர் எல்லைக்கு வெளியே தான்நின்றுகொண்டிருக்கிறது. அதிலிருந்து கிளம்பிய ஹெலிக்காப்டர் மீண்டும் அதிலேயே இறங்கியிருக்கிறது.
இதுகுறித்து இந்திய அதிகாரிகளிடம் நாங்கள் விளக்கிக் கூறிவிட்டோம். மேலும் எங்கள் கப்பல்கள் இந்தியத்துறைமுகங்களுக்கு இன்னும் வரவேண்டியிருப்பதால், இந்தியாவுடன் கருத்துவேறுபாடு கொள்ள விரும்பவில்லை.
மேலும் எனது கண்காணிப்பில் இருக்கும் எல்லா விமானங்களுக்கும் சர்வதேச விமான விதிகளை சரியாகக்கடைபிடிக்கும்படி நான் உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
அத்வானி கோபம்:
இதுகுறித்து இந்திய உயரதிகாரிகள் சிலர் கூறும்போது, அமெரிக்க ஹெலிக்காப்டர் சென்னை வான் எல்லையில்இருந்து 50 மைல் தூரத்திற்கு அப்பால் தான் பறந்துள்ளது. இதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை என்றனர்.ஆனால், கல்பாக்கம் மீது அந்த ஹெலிகாப்டர் பறந்தது விமானத்துறையின் ரேடார்களில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த விஷயம் குறித்து உள்துறை அமைச்சர் அத்வானி கடும் கோபமடைந்திருப்பதாகத் தெரிகிறது.இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications