சென்னை அருகே பிரபல ரவுடி சுட்டுக் கொலை
சென்னை:
சென்னை புறநகர்ப் பகுதியான மடிப்பாக்கத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு பிரபல ரவுடியை பிடிக்கமுயன்றபோது ஏற்பட்ட மோதலில் போலீசார் அவனைச் சுட்டுக் கொன்றனர்.
சென்னை வேளச்சேரி அருகே உள்ளது மடிப்பாக்கம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவன் ராஜன் என்ற பழனிவேல்ராஜன்.
பிரபல ரவுடியான பழனிவேல் ராஜன் மீது 30-க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறிஆகிய வழக்குகள் உள்ளன. நீண்ட நாட்களாக போலீசார் கையில் பிடி கொடுக்காமல் தப்பி வந்தான் பழினிவேல்ராஜன்.
இந்த நிலையில் மடிப்பாக்கம் பஸ் நிலையம் அருகே பழனிவேல் ராஜன் பதுங்கி இருப்பதாக நேற்று இரவுபோலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீஸார் விரைந்துவந்தனர்.
பஸ் நிலையம் அருகே இருந்த பழனிவேல் ராஜன் போலீஸாரைப் பார்த்ததும் தான் வந்திருந்த பைக்கில் ஏறித் தப்பமுயன்றான். உடனே ரவிக்குமார் அவனைத் தடுத்து நிறுத்தி பிடிக்க முயன்றார்.
இதையடுத்து ரவிக்குமாரை தான் வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றான் பழனிவேல் ராஜன். இதனால் தன்னைக்காத்துக் கொள்வதற்காக தான் வைத்திருந்த ரிவால்வரால் பழனிவேல் ராஜனை சுட்டார் ரவிக்குமார்.
இதில் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே இறந்தான் பழனிவேல்ராஜன்.
சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்பொன்.மாணிக்கவேல் மடிப்பாக்கம் விரைந்து வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications