கிரிக்கெட்: இங்கிலாந்து சுற்றுப் பயணம் ரத்தாகுமா?
கொல்கத்தா:
மொஹாலியில் வரும் திங்கள்கிழமை (டிச.3) துவங்கவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்தியஅணியில் வீரேந்திர சேவாக் இடம் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி தன்னுடைய சுற்றுப்பயணத்தை ரத்து செய்யும் என்று தெரிகிறது.
தென் ஆப்பிரிக்காவுடன் கடந்த வாரம் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாததன் மூலம் சேவாக்தண்டனையை அனுபவித்து விட்டார். அதனால் அவர் மொஹாலி டெஸ்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று இந்தியகிரிக்கெட் போர்டு விளக்கமளித்துள்ளது.
ஆனால், அந்த மூன்றாவது டெஸ்டையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அங்கீகரிக்கவில்லை என்பதால்,மொஹாலி டெஸ்ட்டில் சேவாக்கைக் கட்டாயம் நீக்க வேண்டும் என்று அது கூறியிருந்தது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு இன்றைக்குள்ளாக (வெள்ளிக்கிழமை) விளக்கமளிக்க வேண்டும் என்றும்ஐ.சி.சி. உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் ஜக்மோகன் டால்மியாவுடன் பேசுவதற்கு தயார் என்றும்ஐ.சி.சி. கூறியிருந்தது.
அதன்படி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நாளை ஐ.சி.சி. தலைவர்களான மால்கம் ஸ்பீடையும் மால்கம்கிரேயையும் சந்திக்கவிருப்பதாக டால்மியா இன்று நிருபர்களிடம் கூறினார்.
இதற்கிடையே ஐ.சி.சியின் உத்தரவை மீறி இங்கிலாந்து அணியினர் இந்தியாவில் விளையாடத் தயாராக இல்லைஎன்று தெரிகிறது.
எனவே மலேசியப் பேச்சுவார்த்தையின் முடிவில்தான் சேவாக் இந்திய அணியில் இருப்பாரா என்பதும்,இங்கிலாந்து அணி தன் சுற்றுப் பயணத்தை ரத்து செய்யுமா என்பதும் தெரிய வரும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications