கட்டண உயர்வு: போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் முடிவு
சென்னை:
சட்டசபையைக் கூட்டாமல் ஜனநாயக விரோதமாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வுகள் மற்றும் விலைஉயர்வுகளைக் கண்டித்து போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) நடந்த அக்கூட்டத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:
விலைவாசி உயர்வால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையை மேலும் சீரழிக்கும் வகையில்அதிமுக அரசு கட்டண உயர்வுகளை அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த மக்களின் முதுகில் அதிமுக அரசு குத்தியுள்ளது.
சட்டசபையைக் கூட கூட்டாமல் ஜனநாயக விரோதமாகச் செயல்பட்டுள்ள அதிமுக அரசை நாங்கள் வன்மையாகக்கண்டிக்கிறோம்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டண மற்றும் விலைவாசி உயர்வுகளை தமிழக அரசு உடனடியாகத்திரும்பப் பெற வேண்டும்.
இல்லையென்றால், அதிமுக அரசைக் கண்டித்து மாநில அளவில் வலுவான போராட்டங்களை அனைத்துவடிவங்களிலும் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது.
இதற்காக மக்களைத் திரட்டி இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளையும் கலந்து ஆலோசிக்கப்படும்.
விலை உயர்வைக் கண்டித்து மக்கள் கண்டனக் குரல் எழுப்ப வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியின் அனைத்துஅமைப்புகளும் தீவிரமாக கண்டனப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அக்கட்சியுடன் கூட்டணிவைத்திருந்து, பின்னர் கடந்த மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் கூட்டணியை முறித்துக் கொண்டதுகுறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications