கட்டண உயர்வுகள்: டிசம்பர் 7ல் தமிழகம் முழுவதும் மதிமுக போராட்டம்
கோயம்புத்தூர்:
கட்டண மற்றும் விலைவாசி உயர்வுகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் டிசம்பர் 7ம் தேதி போராட்டம்நடத்துவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) கூறினார்.
இதுகுறித்து, இன்று அவர் கோயம்புத்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:
பஸ்-மின் கட்டண மற்றும் விலைவாசி உயர்வுகள் மூலம் அதிமுகவின் அராஜக ஆட்சி உச்சகட்டத்தைஅடைந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வு ஒரு பெரும் பகல் கொள்ளையாகும்.
பணப் புழக்கம் அதிகரிக்கும் என்று கூறி மக்களின் ஓட்டுக்களைப் பெற்றுக் கொண்ட அதிமுக, இன்று அவர்களின்முதுகிலேயே நன்றாகக் குத்திவிட்டது.
இதுபோன்ற விலையேற்றம் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை. இவ்வளவு ஏன், மத்திய அரசுகூட இதுபோன்ற விலை உயர்வை எப்போதும் அறிவித்திருக்கவில்லை.
இந்த கட்டண மற்றும் விலை உயர்வுகளை எதிர்த்து, வரும் டிசம்பர் 7ம் திே அனைத்து மாவட்ட கலெக்டர்அலுவலகங்களுக்கு முன்பாக மதிமுக ஆர்ப்பாட்டங்களை நடத்தும்.
மேலும் சென்னையில் டிசம்பர் 11ம் தேதி மதிமுக சார்பில் மக்கள் விரோத அதிமுக ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்நடத்தப்படும்.
அதிமுக தன்னுடைய கடைசி அத்தியாயத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இனி அதிமுகவிற்கு எதிர்காலமேஇல்லை.
இரு மாநில மக்கள் அநாவசியமாக மோதிக் கொள்வதைத் தவிர்க்கும் பொருட்டு கர்நாடக அரசு உடனடியாகநக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தை விடுதலை செய்ய வேண்டும்.
மேலும் மனிதாபிமான அடிப்படையில் வீரப்பன் காட்டுக்குத் தூதராகச் சென்ற நக்கீரன் ஆசிரியர் கோபாலைக்கைது செய்யும் எண்ணத்தையும் கர்நாடகப் போலீசார் கைவிட வேண்டும் என்றார் வைகோ.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications