எய்ட்ஸ் நோயாளிகள்: 10 பேரில் ஒருவர் இந்தியர்
நியூயார்க்:
உலகம் முழுவதும் "எய்ட்ஸ்" தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மேலும் மனித குல வரலாற்றில் இதுவரை இல்லாதஅளவிற்கு மிகப் பெரிய அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நோயான "எய்ட்ஸ்" இருப்பதைக் கண்டுபிடித்துஇன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
சராசரியாக உலகில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 10 பேரில் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார்.
மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா ஆகிய நாடுகளில் தான் இந்த நோய்வேகமாப் பரவி வருகிறது. இந்த நாடுகளில் இந்த ஆண்டு மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோய்இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நைஜீரியா, தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்குஇலவச மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் இந்த ஆண்டு மட்டும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ள 10,000 இளைஞர்களுக்கும், 5,000குழந்தைகளுக்கும் பொதுவான நோய் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்நாட்டில்எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல தாய்லாந்து நாட்டிலும் மிகக் குறைந்த செலவில் அதாவது ரூ.34 செலவில் பொது சிகிச்சை அளிக்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் உள்ள எய்ட்ஸ் நோயாளிகள் அதிக பணம் செலவழித்து சிகிச்சை செய்து கொள்ளமுடியாத நிலையில் இருக்கிறார்கள். இதற்காக இந்த அரசுகள் இவ்வாறு குறைந்த செலவில் சிகிச்சைத் திட்டங்களைத்தீட்டியுள்ளன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications