குகைகளில் பின்லேடனைத் தேடும் பணி: அமெரிக்கா தொடங்கியது
ஜலாலாபாத்:
பின்லேடன் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் டோராபோரா பகுதியை அமெரிக்கப் படையினர் நெருங்கிவருகின்றனர். ஜலாலாபாத் நகரின் தெற்கே உள்ள இந்தப் பகுதி குகைகள், மலைகள் நிறைந்தது.
இங்கிருந்த 80 தலிபான் வீரர்களையும் நார்த்தர்ன் அலையன்ஸ் சுற்றி வளைத்துப் பிடித்தது.
காண்டஹார் தாக்குதலை நார்த்தர்ன் அலையன்சிடம் விட்டுவிட்டு தனது படைகளை ஜலாலாபாத் நோக்கிஅனுப்பியுள்ளது அமெரிக்கா. இங்கு குகைகளில் நுழைந்து தேடும் பணியில் அமெரிக்கப் படைகள்ஈடுபடவுள்ளனர்.
முல்லாவுக்கு மன்னிப்பில்லை- அமெரிக்கா:
பின்லேடனுடன் மறைந்திருப்பதாகக் கருதப்படும் தலிபான்களின் தலைவர் முல்லா ஒமருக்கு எக் காரணம்கொண்டும் மன்னிப்புத் தர முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறுகையில், காண்டஹாரை விட்டுத் தருவதற்காக முல்லாஒமர் பொது மன்னிப்பும், தப்பிச் செல்ல அனுமதியும் கோரலாம் என்று தெரியவருகிறது. இதை அமெரிக்காஏற்காது.
அதே போல ஆப்கானிஸ்தானைப் பாதுகாக்கும் பொறுப்பை நார்த்தர்ன் அலையனசிடமே ஒப்படைத்துவிடலாம்.இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின படை வர வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை என்றார்.
சிறையில் சிதறிக் கிடக்கும் 500 உடல்கள்:
இந் நிலையில் மஷார்-ஏ-ஷெரீப் நகரில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தை அடக்க அமெரிக்க விமானங்கள்நடத்திய குண்டுவீச்சில் பலியான தலிபான்களின் எண்ணிக்கை 500 ஆக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
இந்தச் சிறையில் இந்த தலிபான் தீவிரவாதிகளின் உடல்கள் இன்னும் சிதறிக் கிடப்பதாக ரெட்கிராஸ் அமைப்புதெரிவித்துள்ளது. இதில் 175 உடல்களை ரெட் கிராஸ் மீட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications