காரிலிருந்து தள்ளப்பட்டு கொல்லப்பட்டாரா ஜீவஜோதியின் கணவர்?
சென்னை:
சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலனின் தூண்டுதலால் கடத்தப்பட்ட ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ்சாந்தகுமார் ஓடும் காரில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது.
தன்னிடம் மேனேஜராக வேலை பார்த்துவந்தவரின் மகளான ஜீவஜோதியின் மீது கண் வைத்த ராஜகோபால்அந்தப் பெண்ணை 3வது திருமணம் செய்ய முயன்றதால் பிரச்சனை ஏற்பட்டது. ஏற்கனவே, பிரின்ஸ் சாந்தகுமாரைகாதல் திருமணம் செய்திருந்த ஜீவஜோதி இந்தத் திருமணத்துக்கு சம்மதிக்காததால் கோபமடைந்தார் ராஜகோபால்.
பிரின்ஸையும் ஜீவஜோதியையும் ஆட்களை வைத்துக் கடத்தினார். பின்னர் ஜீவஜோதியையும் பிரின்ஸையும்பிரித்தார். ராஜகோபாலிடம் இருந்து ஜீவஜோதி தப்பிவிட்டார். ஆனால், கடத்தப்பட்ட பிரின்ஸ் என்ன ஆனார்என்று தெரியவில்லை.
இந் நிலையில் ராஜகோபாலும் அவரது அடியாட்களும் போலீசாரிடம் பிடிபட்டனர்.
இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, திருநெல்வேலியில் இருந்து கடத்தப்பட்ட பிரின்ஸ் வழியில்தப்ப முயன்றதாகவும் இதையடுத்து காரில் வைத்தே தாக்கியதாவும் கூறியுள்ளனர். பின்னர் அந்த காரிலேயேஅவரை சென்னை கொண்டு செல்லத் திட்டமிட்டுக் கிளம்பியதாகவும் ஆனால், அவரக் வழியில் தப்ப முயலவேமீண்டும் அவரை அடித்துத் துன்புறுத்தி பின்னர் ஓடும் காரிலிருந்து வெளியில் உருட்டி விட்டதாகவும்கூறியுள்ளனர்.
அவரை வெளியே தள்ளிவிட்டுவிட்டுச் சென்றிவிட்டதாகவும், அவர் எங்கே போனார் என்று தெரியவில்லைஎன்றும் அந்தக் கும்பல் போலீசிடம் கூறியுள்ளது.
ஆனால், உண்மையில் அவரை கொலை செய்துவிட்டுத் தான் இக் கும்பல் காரிலிருந்து உருட்டி விட்டிருக்கவேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். பின்னர் அரது உடலை இந்தக் கும்பலே புதைத்திருக்கலாம் என்றும்போலீசார் கருதுகின்றனர்.
இன்னும் முழு உண்மையும் தெரியவராததால் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications