வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு 2 ஆண்டு சிறை
சென்னை:
வருமான வரி வழக்கில் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை அப்பீல்நீதிமன்றமும் உறுதிசெய்தது.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தமிழக மேல் சபையில் உறுப்பினராக நிர்மலா நியமிக்கப்பட்டார். இதற்குசிறிது காலத்துக்கு முன்பு பொருளாதாரரீதியில் தான் திவால் ஆகிவிட்டதாக மஞ்சள் நோட்டீஸ் கொடுத்திருந்தார்.இதனால் இவருக்குக் கடன் கொடுத்த பலருக்கும் பணம் கிடைக்காமல் போனது. வருமான வரியைக் கூடசெலுத்தவில்லை.
இப்படி திவால் ஆகிவிட்ட ஒருவரை எம்.எல்.சியாக நியமித்ததை எதிர்த்து பல எதிர்க் கட்சியினர் குரல்கொடுத்தனர். இதையடுத்து அதிமுக சார்பில் இவருக்கு ரூ. 4.64 லட்சம் கடன் தரப்பட்டது. இதை வைத்து அவர்கடன்களை அடைத்தார். ஆனால், வருமான வரி கட்டவில்லை.
இவருக்கு திடீரென பணம் வந்தது எப்படி என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. வருமானவரித்துறையினர் வெண்ணிற ஆடை நிர்மலாவிடம் விசாரணை செய்தனர்.
அதற்கு, வருங்காலத்தில் அதிமுகவிற்காக நடன நிகழ்ச்சி நடத்துவதற்காக கட்சி நிதியிலிருந்து முன் பணமாகப்பெற்றுள்ளேன் என்றும், கடனாக வாங்கவில்லை என்றும் தவறான தகவல் கொடுத்தார்.
ஆனால் அதிகாரிகள் செய்த விசாரணையில் அதிமுக விடம் இருந்து கடனாகத் தான் இந்தப் பணத்தை நிர்மலாபெற்றுள்ளார் என்றும், அதையும் ரொக்கமாகப் பெற்றுள்ளார் என்றும் தெரியவந்தது.
வரிமான வரிச்சட்டம் 269 "எஸ்.எஸ்" பிரிவின்படி 10.09.84க்குப் பிறகு எந்த ஒருவரிடமும் ரூ.10,000க்கு மேல்கடனாகவோ, வைப்பீடாகவோ பணம் பெறும்போது காசோலை அல்லது டிராப்ட் மூலமாக மட்டுமே பெறவேண்டும்.
ஆனால் நிர்மலா இந்த சட்டத்தை மீறி ரூ.4 லட்சத்து 65 ஆயிரத்தை ரொக்கமாகப் பெற்றுள்ளார். எனவே இவர் மீதுவருமானவரித் துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம்நிர்மலாவுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனைவழங்கியது. இந்தத் தீர்ப்பு கடந்த 1997ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து வெண்ணிற ஆடை நிர்மலா சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி அசோக்குமார் மனுவை தள்ளுபடி செய்ததுடன், பொருளாதாரக் குற்றவியல் கோர்ட்வழங்கிய தீர்ப்பையும் உறுதி செய்தார்.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் 269 எஸ்.எஸ். 276 டி.டி. ஆகிய சட்டப் பிரிவுகளை எதிர்த்து ஏற்கனவே உள்ளவழக்கில் தீர்ப்புக் கூறப்படும்வரை, வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு தண்டனையை அமல்படுத்தக் கூடாது என்றும்உத்தரவிட்டுள்ளார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications