நடிகர் விஜய்யைப் பார்க்க வீட்டை விட்டு ஓடிய மாணவி மாயம்
உடுமலை:
நடிகர் விஜய்யைப் பார்ப்பதற்காக வீட்டில் கூட சொல்லாமல் சென்னைக்குச் சென்ற உடுமலைப்பேட்டையைச்சேர்ந்த பிளஸ் டூ மாணவியைக் காணவில்லை என்று புகார் செய்யப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை மகபூப் கான் வீதியைச் சேர்ந்த அருள்நாதன் என்பவர் மகள் சர்மிளா. பிளஸ் டூ மாணவியானசர்மிளாவின் தந்தை அருள்நாதன் இறந்துவிட்டதால், தற்போது அம்மா மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறாள்.
கடந்த 27ம் தேதி மாலை டியூசனுக்குச் சென்று வருகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டுச் சென்ற சர்மிளா வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்த சர்மிளாவின் உறவினர்கள் போலீசில்புகார் செய்தனர்.
இந்நிலையில் சென்னையிலிருந்து சர்மிளா உடுமலைப் பேட்டையில் உள்ள தனது தோழிக்குப் போன் செய்த, நான்சென்னையில் இருக்கிறேன். நடிகர் விஜய்யைப் பார்க்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறாள்.
இதற்குத் தோழி ஏன் அவ்வாறு செய்தாய் என்று திட்டிவிட்டு, சர்மிளா போன் செய்த எஸ்.டி.டி.பூத்தை தொடர்புகொண்டு அவளைப் பிடித்து வைக்குமாறு வேண்டியிருக்கிறாள்.
ஆனால் அதற்குள் சர்மிளா மாயமாகிவிட்டாள்.
இதையடுத்து சென்னையில் உள்ள தங்களின் உறவினர்களுக்கு சர்மிளாவின் பெற்றோர்கள் தகவல் கொடுத்தனர்.மேலும் சென்னைக்குச் சென்று நடிகர் விஜய் வீட்டில் கேட்டதற்கு, விஜய் வீட்டில் இல்லை என்றும், சில நாட்களுக்குமுன்பு ஒரு பெண் விஜய்யைத் தேடி இங்கு வந்தாள் என்றும் கூறியிருக்கிறார்கள்.
இந்நிலையில் சென்னையிலும் போலீசில் புகார் செய்து, சர்மிளாவை அவளது உறவினர்கள் தேடி வருகிறார்கள்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா?












Click it and Unblock the Notifications