ஜீவஜோதியின் கணவர் படுகொலை : இன்று உடல் தோண்டியெடுப்பு
கொடைக்கானல்:
சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலின் ஆட்களால் கொடைக்கானல் மலைப்பகுதியில் உருட்டிவிடப்பட்டுகொலை செய்யப்பட்டதாகச் கூறப்படும் ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை)தோண்டி எடுக்கப்படுகிறது.
தன்னை மூன்றாம் தாரமாகத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக ஜீவஜோதி என்ற பெண் சரவணபவன்ஓட்டல் அதிபர் ராஜகோபால் மீது புகார் செய்தார். இதன் அடிப்படையில் ராஜகோபால் தற்போதுசிறையிலடைக்கப்பட்டு, போலீசார் அவரிடம் அவரது ஆட்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விசாரணையின் போது ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொடைக்கானல் மலைப்பகுதியில்உருட்டிவிடடுக் கொலை செய்துவிட்ட விவரம் தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த 31ம் தேதி கொடைக்கானல் வெள்ளி அருவி அருகே ஒரு ஆண்பிணம் அடையாளம்தெரியாத வகையில் சிதைந்து கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அந்தப் பிணத்தைக் கைப்பற்றி, அதன் அடையாளம் தெரியாததால் பல்வேறுகோணங்களில் அந்தப் பிணத்தின் படத்தை எடுத்துவிட்டு, மலைப்பகுதியில் புதைத்து விட்டனர்.
மேலும் காணாமல் போனபோது சாந்தகுமார் அணிந்திருந்த உடைகளும், பிணத்தின் உடைகளும் ஒத்துப்போயுள்ளன.
இந்தப் பிணத்தைத் தோண்டி எடுத்து அது சாந்தகுமாரின் உடல்தானா என்பதை உறுதிசெய்ய சென்னை போலீஸ்உதவி கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையில் ஒரு போலீஸ் படை, கொடைக்கானல் வந்துள்ளது.
பிணத்தை அடையாளம் காண்பிப்பதற்காக ராஜகோபால் மற்றும் அவரது உதவியாளர்கள் கார்மேகம், டேனியல்,உசேன், தமிழ்ச்செல்வன் ஆகியோரையும் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.
ராஜகோபாலின் வக்கீல் ஆனந்தும் உடன் சென்றுள்ளார். இன்று சாந்தகுமாரின் உடல்தானா என்பதை உறுதி செய்யஅந்தப் பிணம் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications