முன் ஜாமீன் கேட்டு வீரப்பன் மனைவி சேலம் நீதிமன்றத்தில் மனு
சேலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்குப் கொடுக்கப்பட்ட பணத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு பணம்கைமாறியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதையடுத்து தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சேலம்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட போது, அவரை விடுவிக்க வீரப்பனுக்கு கோடிக் கணக்கில்பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பணத்தில் வீரப்பனது கூட்டாளிகள் பங்குபோட்டுக் கொண்டதாகவும், அதில் ஒரு பங் வீரப்பனின் மனைவிமுத்துலட்சுமிக்குக் கொடுக்கப்பட்டதாகவும் அதிரடிப்படை போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து வீரப்பனின் கூட்டாளிகள் மற்றும் அவனது நெருங்கிய உறவினர்கள் 6 பேரைப் போலீசார்கைதுசெய்தனர். இதையடுத்து வீரப்பனின் மனைவியையும் தேடிப்பிடித்து போலீசார் விசாரித்துவிட்டுப் பிறகுஅனுப்பிவிட்டனர்.
இந்நிலையில் மீண்டும் தான் போலீசாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்படலாம் என்றுவீரப்பனின் மனைவி அச்சமடைந்துள்ளார். இதனால் சேலம் இரண்டாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு முத்துலட்சுமி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்திரன், தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை வரும் 5ம் தேதி நடக்கும்என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications