தனிப் பாதையில் திமுக: ஒரே நாளில் 2 பந்த்கள்
சென்னை:
பஸ்-மின் கட்டண உயர்வுகளை எதிர்த்தும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுகளைக் கண்டித்தும்வரும் 7ம் தேதி திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தனியாக பந்த் நடத்தவுள்ளன.
சென்னையில் இன்று (திங்கள்கிழமை) நடந்த திமுக செயற்குழுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இந்த விலை உயர்வை எதிர்த்து த.மா.கா, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் தமிழ்தேசம், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக்கின் ஒரு பிரிவு உள்ளிட்ட 8 கட்சிகள் வரும் 7ம் தேதி பந்த் நடத்தஅழைப்பு விடுத்துள்ளன.
இந்த பந்துக்கு திமுகவும் ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தக் கட்சிகளுடன் திமுகவுக்குசரியான உறவு இல்லாததால் இந்த பந்த்தை ஆதரிக்காமல், அதே தேதியில் தனது கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்துதனியே பந்த் நடத்தப் போவதாக திமுக அறிவித்துள்ளது.
திமுக நடத்தவுள்ள பந்த்தில் பா.ம.க, எம்.ஜி.ஆர். அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கவுள்ளன.
விலைவாசி மற்றும் கட்டண உயர்வுகள் மூலம் ஏவுகணைகளைத் தாங்கிய போர்க்கப்பல் போல இந்த "மினிபட்ஜெட்"டை அதிமுக அரசு பொதுமக்கள் மீது ஏற்றி வைத்துள்ளது என்று திமுக வர்ணித்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சிகளுடன் பேசி முடிவு செய்ய இன்று நடந்த திமுக செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த பந்த்துக்கு அனைத்து தரப்பு மக்களும் தங்களுடைய முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் திமுககேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பஸ் ஊழியர்கள் மீது பழிவாங்கும் போக்கை மேற்கொண்டுள்ள அரசைக்கண்டித்த திமுக செயற்குழு, கள்ளச் சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசைக்கேட்டுக் கொண்டுள்ளது.
பந்த் வெற்றி பெறும்- கருணாநிதி:
தனித்தனியே ஒரே நாளில் பந்த் நடத்தப்படுவதால், இது நிச்சயம் வெற்றி பெறும் என்று திமுக தலைவர் கருணாநிதிநம்பிக்கை தெரிவித்தார்.
இந்த பந்த்துக்கு பாஜக ஆதரவு இல்லையே என்று நிருபர்கள் கேட்டதற்கு, பொதுவாக பாஜக போராட்டங்களில்பங்கேற்காது என்று பதிலளித்த கருணாநிதி, இதனால் திமுக-பாஜக கூட்டணி உறவு பாதிக்கப்படாது என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications