அணை விவகாரம்: தமிழகம்-கேரளத்துக்கு உதவ மத்திய அரசு தயார்
டெல்லி:
தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையிலான முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யதயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 132 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த தமிழகம் திட்டமிட்டுள்ளது.இதற்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கேரள சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது பேசிய அம்மாநில பாசனத்துறை அமைச்சர்ஜேக்கப், தமிழகத்துடன் மோதல் போக்கை கடைபிடிக்க விரும்பவில்லை. இது தொடர்பாக அம் மாநில அரசுடன்பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த விவகாரம் தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை சட்டமன்றத்தில் முழுவிவாதம் நடத்தப்படும் என்றார்.
முன்னதாக அணையைப் பார்வையிட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் அணையில் நீர்க் கசிவு இருப்பதாகவும்இதனால் உயரத்தை அதிகரிப்பது ஆபத்தில் முடியும் என்றும் கூறினர்.
ஆனால், இதைத் தமிழக பாசனத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். விவகாரத்தை திசை திருப்புவதற்காகத் தான்கேரளம் இவ்வாறு கூறுவதாகவும், அணையின் உயரத்தைக் கூட்டுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றனர்.
இந் நிலையில் இந்தப் பிரச்சனை இன்று நாடாளுமன்றத்திலும் வெடித்தது. இரு மாநில எம்.பிக்களும் இப்பிரச்சனையைக் கிளப்பினர். இதையடுத்துப் பேசிய மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் சுஜோய் சக்ரவர்த்திபேசுகையில், இந்த விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய மத்திய அரசு தயாராகஉள்ளது என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications