ஹர்பஜன் பந்து வீச்சில் இங்கிலாந்து சுருண்டது
மொஹாலி:
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று துவங்கிய முதலாவது கிரிக்கெட் டெஸ்டின் முதல் இன்னிங்சில்இந்தியாவின் ஹர்பஜன் சிங்கின் சுழற்பந்து வீச்சில் 238 ரன்களில் இங்கிலாந்து சுருண்டது.
இன்று காலை டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் செய்யத் தீர்மானித்தது. இங்கிலாந்து அணியினரும் மட்டைப்பிடித்துக் கொண்டு களத்தில் இறங்கினர்.
ஆனால் இன்றைய ஆட்டம் துவங்கிய பிறகு 4வது பந்திலேயே இந்தியாவுக்கு முதல் விக்கெட் (மார்க் பட்ச்சர், 4ரன்கள்) கிடைத்தது. இந்திய அணியில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளரான கேரளாவைச் சேர்ந்தடினு யோஹனான் அறிமுகப் போட்டியின் முதலாவது ஓவரிலேயே தன்னுடைய முதலாவது டெஸ்ட் விக்கெட்டைச்சாய்த்தார்.
ஆனால் இங்கிலாந்து அணியினர் சோர்ந்து போய்விடவில்லை. அடுத்த விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மார்க்ஸ்டிரஸ்கோத்திக்கும் (66 ரன்கள்) கேப்டன் நாசர் ஹுசைனும் (85 ரன்கள்) இணைந்து நிதானமாக ஆடி ரன்களைக்குவித்தனர்.
இங்கிலாந்து 129 ரன்களை எட்டியபோது இரண்டாவது விக்கெட் பறிபோனது. இதற்கு அடுத்துவிளையாடியவர்களில் கிரஹாம் தோர்பே மட்டும் அதிக அளவாக 23 ரன்களை எடுத்து இக்பால் சித்திக்கின் பந்துவீச்சில் வி.வி.எஸ். லக்ஷ்மணிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து வந்த மட்டை வீச்சாளர்களை எல்லாம் ஹர்பஜன் சிங்கே கவனித்துக் கொண்டார். ஐந்துஇங்கிலாந்து வீரர்களை தன்னுடைய சுழற்பந்து வீச்சின் மூலம் சொற்ப ரன்களிலேயே பெவிலியனுக்குத் திருப்பிஅனுப்பினார் ஹர்பஜன் சிங்.
இறுதியில் முதல் இன்னிங்சில் 76.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ரன்களைமட்டுமே எடுத்திருந்தது. யோஹனானுக்கும் அனில் கும்ப்ளேக்கும் தலா இரு விக்கெட்டுகளும், சித்திக்குக்கு ஒருவிக்கெட்டும் கிடைத்தன.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியும் துவக்கத்திலேயே சிவசுந்தர் தாசின் (2 ரன்கள்) விக்கெட்டை இழந்தது.இந்தியா 22 ரன்கள் எடுத்த நிலையில் அவர் பட்ச்சர் பந்து வீச்சில் கிளீன் போல்டானார்.
இன்றைய ஆட்ட நேர இறுதியில் தாஸ் குப்தா 19 ரன்களும் கும்ப்ளே 1 ரன்னும் எடுத்து ஆடிக் கொண்டிருந்தனர்.
ஸ்கோர் விபரம்:
முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து: 238/10 (76.3 ஓவர்கள்)
இந்தியா: 24/1 (11 ஓவர்கள்)
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications