ஜீவஜோதி மீதும் போலீசார் சந்தேகம்
சென்னை:
தனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொல்லப்பட்டது ஜீவஜோதிக்கு ஏற்கனவே தெரியும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ராஜகோபாலின் தூண்டுதலின்பேரில் ஜீவஜோதிக்கு தெரிந்தே தான் இந்தக் கொலை நடந்திருக்க வேண்டும் என்று விசாரணை நடத்தி வரும் போலீசார்சந்தேகப்படுகின்றனர்.
ஆனால், தானும் கொலை வழக்கில் சிக்கிவிடலாம் என்று பயந்து தான் ராஜகோபாலைக் காட்டிக் கொடுத்துவிட்டு ஜீவஜோதி கடத்தல் கதைகட்டவிழ்த்து விட்டதாகக் கூறப்படுகிது.
தன்னையும் தனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரையும் ராஜகோபாலின் ஆட்கள் கடத்தியதாகவும் பின்னர் பிரின்ஸை மட்டும் தனியே கொண்டுசென்றதாகவும் ஜீவஜோதி கூறி வந்தார். அவர் ராஜகோபாலின் பிடியில் இருந்து எப்படித் தப்பி வந்து போலீசிடம் புகார் கூறினார் என்பதில் பலசந்தேகங்கள் உள்ளன.
மேலும் ராஜகோபாலுக்கும் தனக்கும் உள்ள பிற வகையான தொடர்புகளை ஜீவஜோதி மறைத்து வருகிறார் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.ஜீவஜோதியின் பல அந்தரக விஷயங்கள் ராஜகோபாலுக்குத் தெரிந்துள்ள விஷயத்தையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
மேலும் ஜீவஜோதி, ராஜகோபால் வழக்கமாக கன்சல்ட் செய்யும் டாக்டர் ஒருவர் போலீசாரிடம் கூறியுள்ள தகவலின்படி இந்த இருவருக்கும் இடையேவேறுவிதமான விவகாரங்களும் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.
இந் நிலையில் சாந்தகுமார் இறந்துவிட்டரா இல்லை உயிருடன் இருக்கிறாரா என்று சந்தேகம் நிலவி வந்த நேரத்திலேயே சென்னையில் ஜீவஜோதிபேட்டியளிக்கும்போது, "என் கணவருக்கு கருமாதி செய்தது போல சடங்குகளைச் செய்தேன்" என்றார்.
அவர் "கருமாதி" என்ற வார்த்தையை அப்போது பயன்படுத்தியதால், தற்போது போலீசார் அவர் மீது பலத்த சந்தேகப்படுகின்றனர். கணவர் சாந்தகுமார்இறந்த விபரம் ஜீவஜோதிக்கு முன்பே தெரிந்திருக்க வேண்டும் என போலீசார் நினைக்கின்றனர்.
இதனால், சாந்தகுமார் கொலை வழக்கில் ஜீவஜோதியும் குற்றவாளியாகச் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications