சந்திரிகா ஆட்சிக்கு வந்தால் மீண்டும் போர் வெடிக்கும்: புலிகள் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

வரும் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்கா தலைமையிலான மக்கள் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தால்இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும் என விடுதலைப் புலிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வரும் 5ம் தேதி இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் புலிகளின் அறிவிப்பு அந் நாட்டில்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நார்வே நாடு உதவியுடன் நடந்து வரும் அமைதி முயற்சிகள்அனைத்தும் வெறும் கனவாகப் போய்விடும் நிலை உருவாகியுள்ளது.

சிங்கள தீவிரவாதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவின் (ஜே.வி.பி.) உதவியுடன் மக்கள் கூட்டணி மீண்டும்ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து புலிகளின் அரசியல் ஆலோசகரானடாக்டர் ஆண்டன் பாலசிங்கம் லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:

ஜே.வி.பி. உதவியுடன் மீண்டும் சந்திரிகா ஆட்சியைப் பிடித்தால் மீண்டும் இலங்கையில் போர் வெடிக்கும். அதற்குநாங்கள் தயாராக இருக்கிறோம்.

எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வென்றாலும் பிரச்சனை தீரப் போவதில்லை. குழப்பம் தான் தொடரும்.எங்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே எந்தவிதமான உடன்பாடும் இல்லை. தேர்தலில் வெல்வதற்காகஇந்தப் புரளியை சந்திரிகா கிளப்பிவிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி வென்று ரணில் விக்கிரமசிங்கே பிரதமரானால் இலங்கை அரசியலில் குழப்பம் தான்அதிகரிக்கும். ஏனென்றால் சந்திரிகா தான் அதிபராக இருப்பார். அதிபருக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்படும்பிரச்சனைகளால் நாட்டில் தொல்லை பெருகும்.

அமைதிக்கு வாய்ப்பே இருக்காது. அரசியலிலும் ஆட்சியிலும் ஸ்திரத்தன்மை இருக்காது.

அதே நேரத்தில் ஆட்சிக்கு வந்தால் எங்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரணில் விக்கிரமசிங்கேகூறியிருக்கிறார். இது நல்ல விஷயம் தான். நாங்களும் பேச்சுவார்த்தைக்குத் தயார் தான்.

ஆனால், பேச்சுவார்த்தை நடத்த சந்திரிகா அனுமதிப்பாரா? எக்சிகியூட்டிவ் பிரசிடென்ட் என்ற பொறுப்பில் அவர்இன்னும் இரு ஆண்டுகள் பதவியில் இருப்பார். அவர் எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் ஒப்புக் கொள்ளமாட்டார். போர் நிறுத்தத்துக்கும் அனுமதிக்க மாட்டார்.

எங்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் முறையில் எல்லாம் நம்பிக்கை இல்லை. தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரம்வாங்கித் தரும் வரை போராட்டம் தொடரும். தேர்தலிலும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. யார் வெல்லப்போகிறார்கள் என்பது பற்றியும் கவலையில்லை.

எங்களுக்கென்று சில நோக்கங்கள் உள்ளன. மட்டக்களப்பையும் யாழ்பாணத்தையும் மீண்டும் எங்கள்கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம். யாழ்பாணத்தை மீண்டும் பிடிக்க போருக்கும் தயார். பேச்சுவார்த்தைக்கும்தயார் என்றார் ஆண்டன் பாலசிங்கம்.

தேர்தல் தொடர்பாக புலிகள் தலைவர் பிரபாகரன் எடுத்துள்ள முடிவைத் தான் பாலசிங்கம் வெளியுலகுக்குத்தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாலசிங்கம் மேலும் கூறுகையில், சந்திரிகா போன்ற போர் ஆதரவாளர்களை ஆதரிக்க வேண்டாம் எனமுதல்முறையாக பிரபாரகன் சிங்கள மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் 4 முக்கிய தமிழர்கட்சிகளையும் ஒன்றிணைந்து போராட வைத்துள்ளார். இந்தக் கூட்டணி எப்போது தொடர வேண்டும் எனவும்கூறியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியான ஈ.பி.டி.பி. தொடர்ந்து தமிழர் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.விரைவில் அந்தக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா யாழ்பாணத்திலிருந்து விரட்டி அடிக்கப்படுவார்.அதோடு இல்லாமல் கொழும்பிலிருந்தும் பேக்-அப் செய்யப்படுவார்.

அவர் மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு வெறுப்பும் இல்லை. அவரை அன்புடன் கட்டியணைக்கஎங்கள் படைகள் தயாராகத் தான் உள்ளன. ஆனால், அவரைச் சுற்றி மிக பலத்த பாதுகாப்பு இருப்பதால் நெருங்கமுடியவில்லை என்றார் பாலசிங்கம்.

பிரச்சாரம் முடிந்தது:

வாக்குப் பதிவுக்கு இரு நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் நேற்றிரவுடன் முடிவடைந்தது. இதுவரைதேர்தல் வன்முறைக்கு 21 பேர் பலியாகியுள்ளனர்.

சந்திரிகா தோற்பார்- கருத்துக் கணிப்பு:

இந் நிலையில் தேர்தல் முடிவு குறித்து நடத்தப்பட்டுள்ள பல்வேறு கருத்துக் கணிப்புகளில் ரணில் விக்கிரமசிங்கேதலைமையிலான எதிர்க் கட்சி வெற்றி பெரும் என தெரிவித்துள்ளன.

முக்கிய ஆங்கில நாளிதழான சன்டே டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், ரணில் விக்கிரமசிங்கேயின் எதிர்க்கட்சி கூட்டணிக்கு 38 சதவீத வாக்குகளும், சந்திரிகாவின் கூட்டணிக்கு 33 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றுதெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+