ரயில் தண்டவாளத்தில் விரிசல்: பெரும் விபத்து தவிர்ப்பு
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலைக் குறிப்பிட்ட நேரத்தில் அதிகாரிகளுக்கு ஒரு பெண்தெரிவித்ததையடுத்து, பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.
கோயம்புத்தூர் வடக்கு ரயில்வே நிலையம் அருகே கணபதி பாலத்தையொட்டி ரயில் தண்டவாளத்தில் விரிசல்ஏற்பட்டிருந்தது. இன்று (திங்கள்கிழமை) காலை 7.30 மணிக்கு அந்த வழியாக வந்த ஒரு பெண் உடனடியாக ரயில்நிலையத்துக்குச் சென்று அதிகாரிகளிடம் இவ்விஷயத்தைக் கூறினார்.
அப்போதுதான் நாகர்கோவிலுக்குச் செல்லும் பேசஞ்சர் ரயில் அந்த ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது.உடனடியாகச் செயல்பட்ட ரயில்வே அதிகாரிகள் நாகர்கோவில் ரயிலை கோயம்புத்தூர் வடக்கு ரயில்நிலையத்திலேயே நிறுத்தினார்கள்.
விரிசல் ஏற்பட்டிருந்த அந்தத் தண்டவாளத்தில் சென்றிருந்தால், 1,400 பேரை ஏற்றிச் சென்ற இந்த ரயில்தடம்புரண்டு, பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் இதுகுறித்து தகவல் தெரிவித்தபெண்ணை அதிகாரிகளும் பயணிகளும் பாராட்டினர்.
இதைத் தொடர்ந்து, தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்டது. ஒரு மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு அந்தநாகர்கோவில் பயணிகள் ரயில் கிளம்பிச் சென்றது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications