ரேஷன் அரிசி விலை உயர்வு: கோவையில் சாலை மறியல்
கோயம்புத்தூர்:
ரேஷன் அரிசி விலை உயர்த்தப்பட்டதை எதிர்த்து கோயம்புத்தூரில் இன்று (திங்கள்கிழமை) 300க்கும் மேற்பட்டபெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர்-கோட்டைமேட்டுப் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் அரிசி வாங்குவதற்காக இன்று காலைபெண்கள் வந்தனர்.
ஆனால் 75 கார்டுகளை மட்டும் பெற்றுக் கொண்ட ரேஷன் கடை ஊழியர்கள், இவர்களுக்கு மட்டும் ஒரு கிலோஅரிசி ரூ.3.50 வீதம் வழங்கப்படும் என்று கூறினார்கள்.
மற்ற அனைவருக்கும் புதிய விலை உயர்வின் படி கிலோ ஒன்றுக்கு ரூ.9 வீதம் வழங்கப்படும் என்றும் அவர்கள்தெரிவித்தனர்.
இக்கடையில் மொத்தம் 1,350 ரேஷன் கார்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், உடனடியாகச் சாலை மறியலில் ஈடுபட்டனர். பழைய விலைக்குதான்அரிசி வழங்க வேண்டும் என்று கோரி அவர்கள் ஆர்ப்பாட்டமும் செய்தனர்.
இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களைச் சமாதானப்படுத்தினர்.
ஆனால், ரேஷன் கடைகளில் பழைய விலைக்கு அரிசி விற்றால்தான் இனி அரிசி வாங்குவோம் என்று கூறிவிட்டு,சாலை மறியலைக் கைவிட்டு சென்றனர்.
மதுரையில்...
ரேஷன் அரிசி விலை உயர்வைக் கண்டித்து மதுரையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
நூற்றுக்கணக்கான மக்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நெல்லையிலும்...
இதேபோல் திருநெல்வேலியிலும் ரேஷன் கடைகளில் அரிசி விலை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, 500க்கும்மேற்பட்ட மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர்.
இனி எங்களுக்கு இந்தக் கார்டால் பிரயோஜனம் இல்லை என்று கூறி மாவட்ட கலெக்டரிடம் தங்கள் ரேஷன்கார்டுகளைக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications