போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது சாந்தகுமாரின் உடல்
சென்னை:
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் மீதான வழக்கில், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரின் உடலை தோண்டியெடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) பிரேதப்பரிசோதனை நடந்தது.
சென்னையைச் சேர்ந்த ஜீவஜோதியை, சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் மிரட்டி தன்னை 3-வதுதிருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும், இதுதொடர்பாக தனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரைகடத்திச் சென்று விட்டதாகவும் கூறி வேளச்சேரி போலீஸில் ஜீவஜோதி புகார் கொடுத்தார். இதையடுத்துராஜகோபால் காஞ்சிபுரம் கோர்ட்டில் சரணடைந்தார்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ராஜகோபாலின் ஆட்கள், சாந்தகுமாரை கொன்று கொடைக்கானல்மலையிலிருந்து உருட்டி விட்டது தெரிய வந்தது.இதையடுத்து கொடைக்கானல் போலீஸாரைத் தொடர்புகொண்டபோது அடையாளம் தெரியாத பிணமாக சாந்தகுமார் புதைக்கப்பட்டது தெரிய வந்தது.
தனது கணவரின் இறந்த நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்த்து ஜீவஜோதியும் அவர் சாந்தகுமார்என்பதை அடையாளம் காட்டினார். இதையடுத்து சாந்தகுமாரின் உடலை தோண்டியெடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி செவ்வாய்க்கிழமை காலை சாந்தகுமாரின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது. அதை ஜீவஜோதிஅடையாளம் காட்டினார். பின்னர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் மெய்யழகன்தலைமையிலான டாக்டர்கள் குழு பிரேதப் பரிசோதனை மேற்கொண்டது.
பின்னர் கொடைக்கானல் தாசில்தாரிடம் ஜீவஜோதி வாக்குமூலம் அளித்தார். அதில், தன்னைத் திருமணம் செய்துகொள்ள நான் மறுத்த கோபத்தில் தனது கணவர் சாந்தகுமாரை கடத்திச் சென்று ராஜகோபாலும் அவரது ஆட்களும்கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications