நீதிபதியை விட நான் நீதியை அதிகம் மதிக்கிறேன்: கருணாநிதி
சென்னை:
டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்குகளிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது குறித்துதிமுக தலைவர் கருணாநிதி நேரடியான பதிலை சொல்லவில்லை.
நிருபர்கள் அவரிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:
இதுகுறித்துக் கருத்து கூறுவதற்கில்லை. ஒரு நீதிபதி நீதியை மதிப்பதை விட கூடுதலான மரியாதை நீதியின் பால்எனக்குண்டு.
இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வது குறித்து திமுக சட்ட நிபுணர்கள் ஆலோசித்துமுடிவு செய்வார்கள்.
நீதி பெற நெடுந்தூரம் போய்த்தான் ஆக வேண்டும். தார்மீக அடிப்படையில் இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்துஉச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல் செய்யுமா என்பது குறித்து நான் பதில் கூற முடியாது.
இதுபோன்ற யூகமான கேள்விக்கு என்னிடம் பதிலை எதிர்பார்க்கக் கூடாது. மேலும், இந்தக் கேள்வியைகேட்டிருக்க வேண்டிய இடம் வேறு என்றார் கருணாநிதி.
திருப்புமுனை தீர்ப்புகள் - வீரமணி:
தமிழக அரசியிலில் திருப்புமுனைகளை ஏற்படுத்தப் போகும் தீர்ப்புகளை உயர் நீதிமன்றம் கொடுத்துள்ளது என்றுதிராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி கூறியுள்ளார்.
ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், நீதி, நியாயம் எப்போதும்தோற்காது என்பதை இந்த தீர்ப்புகள் நிரூபித்துள்ளன. தமிழக அரசியலில் இந்த தீர்ப்புகள் பெரும் திருப்புமுனைகளை ஏற்படுத்தப் போகின்றன என்றார் வீரமணி.
இது இறுதித் தீர்ப்பு அல்ல - ராமதாஸ்:
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இறுதியானதல்ல. உச்சநீதிமன்றம்தான் இறுதியான தீர்ப்பை வழங்க வேண்டும்என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கோவையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து யாரேனும் பொதுநலன் மனு தாக்கல் செய்யலாம். எனவே உச்ச நீதிமன்றம் வழங்குவதுதான் இறுதியான தீர்ப்பாக இருக்க முடியும்என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications