இலவச மின்சாரம் ரத்து ஆகாது - பன்னீர் விளக்கம்
சென்னை:
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று முதல்வர் பன்னீர் செல்வம் விளக்கம்அளித்துள்ளார்.
நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி மின், பஸ், பால், ரேசன் பொருள்களின் விலையை அரசு உயர்த்தியது.ஆனால், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரமும், குடிசைகளுக்கு வழங்கப்படும் இலவசமின்சாரமும் தொடரும் என்று அறிவித்தது.
அனைவருமே இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பெரும் வசதிபடைத்த விவசாயிகள் தான் இலவச மின்சாரத்தால் பலனடைந்து வருகின்றனர். சிறிய அளவில் விவசாயம்செய்பவர்களின் நிலங்களில் மோட்டார்களே கிடையாது. அவர்களுக்கு இலவச மின்சாரத்தால் எந்தப் பலனும்இல்லை.
இதை பல தரப்பினரும் சுட்டிக் காட்டி வருவதையடுத்து இந்த இலவச மின்சாரத்தை வசதி படைத்தவிவசாயிகளுக்கு வழங்குவதை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்று நேற்று சில தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதை மறுத்து சென்னையில் நேற்று மாலை பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:
பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பொது விநியோகத்தில் வசதி வாரியாகப் பிரிக்கப்பட்டு சலுகைகள்வழங்கப்படுவது போல, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திலும், சிறு விவசாயிகளுக்கும், பெரியவிவசாயிகளுக்கும் இடையில் வேறுபாடு காணப்படுமா என்று கேட்கப்பட்டது.
அதற்கு நான், இதுகுறித்து துல்லியமான ஒரு கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். இருப்பினும், இதுகுறித்துஇன்னும் பரிசீலிக்கப்படவில்லை என்று பதிலளித்தேன்.
எனவே இதுகுறித்து உண்மைக்கு மாறாக வெளியிடப்படும் தவறான செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில்,வேளாண்துறையைச் சார்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திட்டம் தொடர்ந்துசெயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications