இலங்கையில் நாளை தேர்தல்: பாதுகாப்பு தீவிரம்
கொழும்பு:
இலங்கையில் நாளை (புதன்கிழமை) நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, அந்நாடு முழுவதும்பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் தேர்தலின்போதும் கலவரம் நடக்கக் கூடும் என்று கருதப்படுவதால், நாடு முழுவதும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
போலீசார் மட்டுமல்லாமல் இலங்கை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றுகூறப்படுகிறது.
இதற்கிடையே இலங்கையில் முகாமிட்டுள்ள ஐரோப்பிய மற்றும் இந்தியத் தேர்தல் பார்வையாளர்கள் அங்குஏற்பட்ட தேர்தல் வன்முறை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். தேர்தலின்போதும் இது எதிரொலிக்கக் கூடும்என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
இதற்கிடையே, தேர்தலின்போது ஆளும் கட்சியினர் தில்லுமுல்லுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் இத்தேர்தலின் முடிவில் தொங்கு பாராளுமன்றமே அமையும் என்று அமைச்சர் ஜெயரத்னே கருத்துதெரிவித்துள்ளார்.
மேலும் தங்கள் கூட்டணிக்கு 108 இடங்கள் கிடைக்க வாய்ய்புள்ளதாகவும் அவர் கூறினார்.
சுமார் 1 கோடியே 20 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பதிவு செய்யவுள்ளனர். இலங்கைமுழுவதும் 27 கட்சிகளைச் சேர்ந்த 4,600 பேர் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
நாளை இரவுக்குள்ளாகவே தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கடந்த 20 ஆண்டுகளாக இலங்கையில் நடந்து வரும் வன்முறைச்சம்பவங்களுக்கு இந்தத் தேர்தலாவது முற்றுப்புள்ளி வைக்குமா என்பதுதான் அந்நாட்டு மக்களின் பெரியகேள்விக் குறியாகும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications